சினிமாவில் ஹீரோயினாக ஜெயித்து, அதன் பிறகு நிஜ வாழ்க்கையிலும் தன்னை ஹீரோயினாக நிலைநிறுத்திக் கொண்டவர்கள். ரித்விகா சிங் அப்படியே உல்டா. நிஜ வாழ்க்கையில் ஹீரோயினாக இருந்து அதனால் சினிமா ஹீரோயின் ஆனவர்.இவர் சினிமாவுக்கு புதிது என்பதால் அவரைப் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக் பார்த்துவிடலாம். அம்மா பெயர் சிந்து. அப்பா ராஜபுதனத்து ஆளு. காதல் கனிந்து திருமணம் ஆனது. வாழ்ந்தது மும்பையில். அப்பா குத்துச் சண்டை பயிற்சியாளர். அதனால் படிப்போடு குத்துச் சண்டையும் ேசர்த்தே கற்றுக் கொண்டார் ரித்விகா.
குத்துச் சண்டை வாழ்க்கை தன்னோடு போகட்டும் என்றுதான் அவரது தந்தை நினைத்தார். அதனால் மகளை சுய பாதுகாப்புக்காக கராத்தே கற்றுக்கொள்ளச் சொன்னார். கராத்தேவில் பிளாக் பெல்ட் வரை வாங்கினார் ரித்வி. ஆர்வத்துக்காக அவ்வப்போது குத்துச் சண்டை ரிங்கிலும் ஏறினார். விளைவு - அதிலும் கில்லாடியாக உருவானார். மகளின் குத்துச்சண்டை ஆர்வத்தைப் பார்்த்த அப்பா, ஆசைக்கு தடை போடாமல் பயிற்சி கொடுத்து நேர்த்தியான குத்துச்சண்டை வீராங்கனை ஆக்கினார்.
தேசிய விளையாட்டுகளில் பங்கேற்ற ரித்விகா தன் அழகாலும், திறமையாலும் தனித்து தெரிந்தார். ‘இறுதிச் சுற்று’ படத்தின் இயக்குனர் சுதா, ஒரு குத்துச்சண்டை வீராங்கனையின் கதையை தயார் செய்துவிட்டு அதற்கான நாயகியைத் தேடினார். சினிமாவுக்கேற்ற அழகும் இருக்க வேண்டும், குத்துச் சண்டையும் தெரிந்திருக்க வேண்டும்.
நாடு முழுவதும் வலைவீசித் தேடினார். சுமார் 100 வீராங்கனைகளைச் சலித்தபிறகே இறுதியில் தேறினார் ரித்விகா. அழகும் இருக்கிறது. திறமையும் இருக்கிறது. நடிகத் தெரியவேண்டுமே? அதிலும் கதைப்படி தன் தந்தை வயதுடைய பயற்சியாளர் மாதவனை காதலிக்க வேண்டும். வெட்கப்பட வேண்டும், சிணுங்க வேண்டும், கட்டிப்பிடிக்க ேவண்டும்.
இதெல்லாம் சாத்தியமா?
பொதுவாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கு வெட்கம் அத்தனை எளிதில் வந்து விடாது. கொஞ்சம் முரட்டு சுபாவமும் இருக்கும் என்பார்கள். அந்த பயத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே துறந்தார் ரித்விகா.
சென்னை காசிமேட்டில்தான் முதல் நாள் படப்பிடிப்பு. தொளதொள ஆண் சட்டை, அழுக்குப் பாவாடை அணிந்து ரித்விகா மீன் விற்க வேண்டும். இதுதான் காட்சி. காட்சியை முதல் நாளே இயக்குனர் ஒன்றுக்கு நாலு முறை விளக்கி இருந்தார். மறுநாள் ஸ்பாட்டுக்கு சென்றதுேம ரித்விகா செய்த முதல் வேலை அப்படியே மீன் விற்கும் பெண்களைக் கவனித்து அதை திரும்பச் செய்ததுதான். முதல் நாள், முதல் காட்சி, ஒரே டேக்கில் ஓகே. இருந்தாலும் ெமாழிப்பிரச்சினை இருந்ததால் ெவறுமனே வாயசைத்தால் போதும். வசனத்தை டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என இரண்டாவது டேக் எடுத்தார் இயக்குனர் சுதா.
இறுதிச்சுற்று வெளிவந்து விட்டது. ஒரே படத்தில் தேசிய விருது வரைக்கும் பேசப்படுகிறார். நடிப்பு அவருக்கு சம்பந்தமே இல்லாதது. அவரது குடும்பம் கலைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. நடிப்பதற்கு முன்பு சினிமாகூட அதிகம் பார்த்ததில்லை. குத்துச்சண்டை வீர விளையாட்டு. நடிப்பு மென்மையான அபிநயம். இப்படி நேரெதிரான இரண்டு துறைகளிலும் வென்று காட்டியிருக்கிறார் ரித்விகா. இது எல்லாவற்றுக்கும் காரணம் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, எதையும் சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பு. நாளை இமயமலை ஏறும் குழுவில் ரித்விகாவைச் சேர்த்தால் சிகரம் எட்டும் முதல் ஆளாக அவர்தான் இருப்பார்.
சினிமா ஹீரோயினாக இருந்து நிஜ ஹீரோயினானவர்கள் மத்தியில் நிஜ ஹீரோயினாக இருந்து சினிமா ஹீரோயினாகியிருக்கிறார் ரித்விகா. அவர் செல்ல வேண்டிய தூரமும், அவருக்கான உயரங்களும் நிறைய இருக்கின்றன.
Tags:
Cinema
,
இறுதிச்சுற்று
,
குத்துச்சண்டை
,
சினிமா
,
தேசிய விருது
,
ரித்விகா சிங்