விஜய்சேதுபதியின் எல்லா படங்களையும் பார்க்க விரும்புகிறேன். பிரபல நடிகை..!!
சுதா இயக்கத்தில் மாதவனுடன் 'இறுதிச்சுற்று' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரித்திகாசிங், தற்போது 'காக்கா முட்டை' பட இயக்குனர் மணிகண்டன் இயக்கும் அடுத்தபடமான 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியது குறித்து ரித்திகாசிங் கூறியபோது, 'நானும் எனது தந்தையும் மும்பையில் இருந்து அதிகாலை 4.30 க்கு கிளம்பி சென்னை வந்து மணிகண்டனை நேரில் சந்தித்து கதை கேட்டோம். அவர் கதை கூறிய விதமும், எனது கேரக்டரும் மிக அருமையாக இருந்தது. உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அன்று இரவே மும்பை திரும்பினோம். இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும்.
மேலும் விஜய்சேதுபதி குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அவரை முதன்முதலில் சந்திக்கும் முன்னர் அவர் நடித்த அனைத்து படங்களையும் பார்க்க விரும்புகிறேன். அவர் நடித்த படங்களின் லிஸ்ட்டை தற்போது எடுத்துள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.