கோலிவுட், பாலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரித்திகா சிங். இவர் நிஜ குத்து சண்டை வீராங்கனை. நடிகர் மாதவனின் ரசிகை. ‘இறுதிச்சுற்று’ படத்தில் மாதவன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
விளையாட்டு வீராங்கனைகள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதால் மென்மை தன்மைக்கு பதிலாக முரட்டுதன்மை வந்துவிடுவது இயற்கை. அதுபோல்தான் மென்மையான ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு விரைப்பான தோற்றத்துடன் வந்து நின்றார் ரித்திகா.
இயக்குனர் சுதா அவரிடம் நெருங்கி, ‘இப்படி விரைப்பா நின்னா லவ் சீன்ல எடுக்காது. வெட்கப்பட கற்றுக்கொள்’ என்றார். இதுபற்றி ரித்திகா கூறும்போது, ‘படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன் 2 நாட்கள் எனக்கு பயிற்சி தந்தார்கள். விரைப்பான தோற்றத்தில் கேமரா முன் நின்றபோது இந்த பாடிலேங்குவேஜ் வேண்டாம். ஜாலியா, ரொமான்டிக்கா இருக்க வேண்டும். பாடியை லூஸாக வைத்துக்கொள் என்றனர்.
அதைக்கொண்டு வரகொஞ்சம் சிரமப்பட்டாலும் சில மணி நேரத்தில் அதை பிடித்துவிட்டேன். இதில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தது என்றால் மாதவனைப் பார்த்து வெட்கப்பட்டு நடித்ததுதான்’ என்றார்.
Tags:
Cinema
,
இறுதிச்சுற்று
,
சினிமா
,
மாதவன்
,
ரித்திகா சிங்