இறுதிச்சுற்று படம் வெற்றி என்றவுடன் மாதவனை வைத்து அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறது ஒய்நாட் ஸ்டுடியோஸ். ஏற்கெனவே இந்நிறுவனம் தயாரித்த வ குவார்ட்டர்கட்டிங் என்கிற படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியினர்தான் அந்தப்படத்தை இயக்கவிருக்கிறார்களாம்.
இறுதிச்சுற்று படத்தில் இயக்குநர் சுதாவுக்கு உறுதுணையாக இருந்தாராம் புஷ்கர். அப்போது மாதவனுடனும் நல்ல நட்பு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதே மாதவனை வைத்து ஒருபடம் எடுக்கத் திட்டமிட்டதாகவும் அது இப்போது உறுதியாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் மாதவன் நடிப்பது மட்டுமின்றி அவருடன் இன்னொரு நாயகனாக விஜய்சேதுபதியும் இணையவிருப்பதாகச் சொல்கிறார்கள். இருவரிடமும் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்களாம்.
இரண்டுநாயகர்கள் படம் என்றாலும் படத்தின் கதை மிகவும் நன்றாக அமைந்திருப்பதால் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
Tags:
Cinema
,
இறுதிச்சுற்று
,
சினிமா
,
புஷ்கர் காயத்ரி
,
மாதவன்
,
விஜய்சேதுபதி