நடிகை வரலட்சுமியுடன் தான் இணைந்து இருக்கும் புகைப்படத்தை, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள நடிகர் விஷால், 'இந்தப்படமே அனைத்தையும் சொல்லும்' என, கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், முன்னாள் தலைவர் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் விஷால்.
தாய் பகையானாலும் குட்டி உறவு என்பது போல், சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியை, விஷால் காதலிப்பதாக கூறப்பட்டது. இதற்கு, இருதரப்பிலும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
மாறாக, பொது நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்தே சென்று வந்தனர். 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், இருவரும் இணைந்த புகைப்படங்களை, அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், விஷாலும், வரலட்சுமியும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக பரவிய தகவலை தொடர்ந்து, நடிகர் விஷால், 'டுவிட்டரில்' நேற்று, வரலட்சுமி மற்றும் செல்ல நாயுடன் இணைந்து இருக்கும் படத்தை வெளியிட்டு, 'இது எல்லாவற்றையும் சொல்லும்' என, தகவல் வெளியிட்டு உள்ளார்.
விஷாலின் பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, நடிகர், நடிகையரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
'தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், 2018ல் கட்டி முடிக்கப்படும் திருமண மண்டபத்தில் நடைபெறும் முதல் திருமணம், விஷால் - வரலட்சுமி ஜோடியாக இருக்கலாம்' என, 'கோலிவுட்' எனப்படும் சென்னை, கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
Tags:
Cinema
,
சரத்குமார்
,
சினிமா
,
திருமணம்
,
தென்னிந்திய நடிகர் சங்கம்
,
வரலட்சுமி
,
விஷால்