விஜய்சேதுபதி மற்றும் பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியன் நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கத்தில் “காதலும் கடந்துபோகும்” படம் நாளை வெளியாகவிருக்கிறது. இன்றே அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் விஜய்சேதுபதி.
காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு நாயகியாக நடிக்கவிருப்பவர் இறுதிச்சுற்றில் ரசிகர்களை நாக் அவுட் செய்த ரித்திகா சிங் தான். இப்படத்திற்கு “ஆண்டவன் கட்டளை” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கான பூஜை மற்றும் தொடக்கவிழா இன்று தொடங்கியது.
இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், “படத்தில் பாடல்களே இல்லையென்றும் பின்னணி இசை மட்டுமே என்றும் படக்குழு சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்”.
கடந்த வருடம் வெளியான காக்காமுட்டை வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பாஸ்மார்க் வாங்கியது. இவரின் இயக்கத்தில் விமல் நடித்த குற்றமே தண்டனை விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படம் தான் ஆண்டவன் கட்டளை.
Tags:
Cinema
,
இறுதிச்சுற்று
,
சினிமா
,
பிரேமம்
,
ரித்திகா சிங்
,
விமல்
,
விஜய்சேதுபதி