“நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை” நடிகை ஸ்ரீதிவ்யா அதிரடி..!!

1:09 AM |
“காஷ்மோரா படத்தில் நடித்தபோது நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை” என்று நடிகை ஸ்ரீதிவ்யா கூறினார்.

படவிழா

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் நயன்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கிறார்கள். கோகுல் டைரக்டு செய்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

விழாவில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசும்போது, “மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான ‘பாகுபலி’ படம் திரைக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரமாண்ட படமாக காஷ்மோரா தயாராகி உள்ளது. நயன்தாரா மிக சிறந்த நடிகை என்பதை இந்த படத்தில் நிரூபிப்பார். இதற்கு முன்பு எல்லா படங்களிலும் ஸ்ரீதிவ்யா கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படத்தில் நகரத்து பெண்ணாக வருகிறார்” என்றார்.

ஸ்ரீதிவ்யா பேட்டி

பாடல் வெளியீட்டு விழா முடிந்ததும் விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“காஷ்மோரா படத்தின் கதையை டைரக்டர் கோகுல் என்னிடம் சொன்னபோது நயன்தாரா கவுரவ வேடத்தில்தான் வருகிறார் என்றார். அதனால் எனக்கு அவரைப்பார்த்து பயம் ஏற்படவில்லை. அவருக்கு அதிக காட்சிகள் இருக்குமோ என்று மிரளவும் இல்லை. எனது கதாபாத்திரம் எனக்கு திருப்தியாக தோன்றியது. வித்தியாசமாகவும் இருந்தது. இந்த படத்தில் காதல் இல்லை. நானும் நயன்தாராவும் ஒரே நாள்தான் இணைந்து நடித்தோம்.

நயன்தாரா

முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது என்னிடம் நன்றாகவே பேசினார். அவர் அழகாக இருந்தார். இதுவரை பல படங்களில் பாவாடை தாவணியில் நடித்து விட்டேன். அது எனக்கு பொருத்தமாக இருந்தது என்று சொன்னார்கள். இந்த படத்தில் ‘மாடர்ன் கேர்ள்’ ஆக வருகிறேன். நான் அதிக சம்பளம் கேட்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறு. அப்படி யாரிடமும் கேட்கவில்லை. நான் சூர்யாவின் பெரிய ரசிகை. அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் தோன்ற விரும்புகிறேன்.”

இவ்வாறு ஸ்ரீதிவ்யா கூறினார். பட விழா நிகழ்ச்சிகளை அஞ்சனா தொகுத்து வழங்கினார். டைரக்டர் கோகுல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும் வாசிக்க…

நயன்தாரா இப்படி நடிக்க மறுத்தாரா?!! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

12:09 AM |
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளார்.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உயர்ந்து இருக்கிறார்.

 ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது தமிழில் திருநாள், இருமுகன், காஷ்மோரா ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் இரண்டு புதிய தமிழ் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக பாபுபங்காரம் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த தெலுங்கு படம் நயன்தாராவின் திடீர் கெடு பிடிகளால் திரைக்கு வர முடியாமல் முடங்கி இருப்பதாக படக்குழுவினர் ஆவேசப்படுகின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.

 நயன்தாரா-வெங்கடேஷ் தொடர்பான பாடல் காட்சியொன்றும் சில வசன காட்சிகளும் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது. இவற்றை முடித்து விட்டு இந்த மாதம் இறுதியில் பாபுபங்காரம் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர்.

பாடல் காட்சியில் நயன்தாராவுக்கு அரைகுறை ஆடைகள் உடுத்த கொடுத்து கவர்ச்சியாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நயன்தாரா திடீர் என்று அந்த பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே அந்த படத்துக்காக கொடுத்த கால்ஷீட் திகதிகள்  முடிந்து விட்டன என்றும் பாடல் காட்சிக்காக கூடுதல்திகதிகள் ஒதுக்கி தர முடியாது என்றும் கூறிவிட்டாராம். மூத்த நடிகரான வெங்கடேசுடன் கவர்ச்சி உடையில் நடிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முடியாமல் படக்குழுவினர் தவிக்கின்றனர். இது நயன்தாரா-வெங்கடேஷ் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளதாக தெலுங்கு பட உலகினர் முணுமுணுக்கின்றனர். நயன்தாராவை சமரசப்படுத்தி பாடல் காட்சியில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.

ஏற்கனவே சிம்புவின் இது நம்ம ஆளு படத்திலும் இதே போன்று கால்ஷீட் முடிந்த பிறகு பாடல் காட்சியில் நடிக்க நிர்ப்பந்திப்பதாக குற்றம் சாட்டி அதில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய படங்களில் நடிப்பதற்கு நயன்தாரா இப்போது நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம். காதல் காட்சிகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன். கவர்ச்சி ஆடைகள் அணிய மாட்டேன் என்றெல்லாம் கூறுகிறாராம்.

காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். கவர்ச்சியாக நடிக்க வேண்டாம் என்று காதலர் வற்புறுத்துவதாகவும் அதனாலேயே கவர்ச்சியாக நடிக்க அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com