நயன்தாராவின் மாஸ்டர் ப்ளான்..!!

12:43 AM |
இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர் நயன்தாரா.

அதை தொடர்ந்து வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார், அப்போது நயன்தாரா மார்க்கெட் வேறு, தற்போது வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

அட்லீ இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

நயன்தாரா இதை வைத்தே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டுவிட்டாராம், அது என்னவென்றால் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தால், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

2019-ல் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா..!!

11:29 PM |
நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்த போது நாயகி நயன் தாராவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானதால் அது உண்மை தான் என்று எல்லோரும் நம்பினார்கள்.

இருவரையும் சைமா விருது விழா உட்பட பல திரையுலக விழாக்களில் ஒன்றாக பார்க்க முடிந்தது. அவ்வளவு ஏன் சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைகளுக்கு கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு விக்னேஷ் சிவனை அழைத்து பண்டிகையை சீறும் சிறப்புமாக கொண்டாடியதெல்லாம் நடந்தது.

இப்படி இருவரும் காதலில் கண்டுண்டு கிடப்பது உலகமறிந்த விஷயமாகி விட சூர்யாவை வைத்து புதுப்படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ்சிவனுக்கு வாங்கிக் கொடுத்ததே நயன் தான் என்கிற ஒரு சீக்ரெட் செய்தியும் உண்டு.

இப்படி தனது காதலர் விக்னேஷ்சிவனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் கூடவே இருந்த நயன்தாராவை தனது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

நயனுக்கும் வயதாகிக் கொண்டே போவதால் வருகிற 2019-ம் ஆண்டில் எங்கள் திருமணம் என்று தனது நண்பர்களிடம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

முதல் இரண்டு காதலும் புட்டுக் கொண்டதில் ரொம்பவே அப்செட்டாகியிருந்த நயனுக்கு விக்னேஷ் சிவனின் இந்த முடிவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.
மேலும் வாசிக்க…

நயன்தாரா கல்யாணம் எப்போது என்று வெளியான தகவல்..!!

11:58 PM |
நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை. இந்த வருடம் அவர் நடித்த நிறைய படங்கள் ஹிட்டானது.

கூடவே காதல் குறித்த செய்திகளும் ரசிகர்கள் மனதை ஹிட்டாக்கியது. சிம்புவுடன் காதல் பின் வம்பாகி பிரபு தேவாவுடன் காதல் என செய்திகள் பறந்தது.

பின் விலகிப்போன இவர் நானும் ரௌடி படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் என்று சொல்லப்பட்டு செய்திகள் வந்தன.

ஆனாலும் எதுவும் சொல்லாமல் இருக்கும் இவர்களால் மௌனம் சம்மதம் என ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவனையும் அவரது அம்மாவையும் வீட்டிற்கு அழைத்து விருந்துகொடுத்த நயன்தாரா இந்த முறையாவது காதல் வெற்றி பெறவேண்டும் என நினைக்கிறாராம்.

விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு அவரை பிடித்து வீட்டதனால் அடுத்தவருடம் திருமணம் நடக்கும் என்று கிசுகிசுக்கப்படுறது. நயன்தாரா தற்போது 3 கோடி வரை சம்பளம் வாங்குவதனால் படத்தில் தொடந்து நடிப்பாரா என பேசப்படுகிறது.

ஏற்கனவே சமந்தா திருமணத்திற்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது அனுஷ்காவிற்கு விரைவில் பிரபல தொழிலதிபரோடு திருமணம் செய்வதாக வந்த செய்தியை தொடர்ந்து தற்போது நயன்தாரா பெயரும் சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

வருங்கால மாமியாருக்கு விருந்து கொடுத்து அசத்திய பிரபல நடிகை..!!

12:24 AM |
நடிகை நயன்தாரா, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனின் அம்மாவை எப்படி சரி செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். நயன் எங்கு சென்றாலும், அவரில்லாமல் செல்வதில்லை.

விக்னேஷ் சிவனின் அம்மா முன்னாள் காவல்துறை அதிகாரியாம். சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பணி புரிந்தவராம். அப்போது அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்த பல ரவுடிகளை அடக்கியவர் என்று கூறப்படுகிறது.

இதனால், ஆரம்பத்தில் நயனுக்கு அவர் மேல் பயம் இருந்ததாம். ஆனால், பழக பழக அவர் இனிமையானவர் என்று புரிந்து கொண்டாராம்.மேலும், தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக, வருங்கால மாமியாரை, சென்னையில் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து விருந்தும் கொடுத்தாராம்.
மேலும் வாசிக்க…

நயன் – விக்னேஷ் சிவன் ரகசியமாக கோவிலுக்கு சென்றது ஏன்? – விபரம் உள்ளே..!!

12:08 AM |
நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்-நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாக கோலிவுட்டில் பரவலாக செய்தி பரவி வந்தது. அந்த படப்பிடிப்பின்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதையெல்லாம் உறுதிப்படுத்தும் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் திடீரென கும்பகோணம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளனர்.

இருவரும் கோவிலுக்கு சென்றது பல்வேறு தரப்பிலும் வெவ்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இருவரும் எதற்காக கும்பகோணம் கோவிலுக்கு சென்றார்கள் என்று விசாரிக்கையில், விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நல்ல வெற்றியை பெற இருவரும் சேர்ந்து கும்பகோணம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் வாசிக்க…

நயன்தாரா ஒரு அப்பாவி..! வரிசையாக ஏமாற்றும் காதலர்கள்..!!

2:54 AM |
உண்மையிலேயே நயன்தாரா படு அப்பாவி என்கிறார்கள். அவரது விசுவாசிகள் மற்றும் நண்பர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர்.

ஒருவரை பிடித்து விட்டது என்றால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். எதை வேண்டுமானாலும் இழப்பார். சிம்புவுடன் காதலில் இருந்தபோது விலை உயர்ந்த பொருட்கள், வைர ,பிளாட்டின மோதிரங்கள் பரிசாக அளித்தாராம்.

வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போனால் அங்கு கிடைக்கும் காஸ்ட்லி பொருட்களை தேடி தேடி வாங்கி வந்து கொடுக்கும் பழக்கம் அவருக்கு உண்டு.

அதன் பின் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்த போது அவர் அமெரிக்காவில் ஆரம்பிக்க இருந்த நடனப் பள்ளிக்கு சில கோடிகளை இழந்தார் என்று பேசப்பட்டது..

உதயநிதியும் விரட்டி விரட்டி காதலித்தார். ஆனால் பட்டும் படாமல் பழகி விட்டு கழண்டு கொண்டார் என்கிறார்கள்.

அதன் பின் வெறுத்து போய் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். மீண்டும் தமிழ் படங்களில் பிசியானார்.

அப்போது நானும் ரவுடிதான் படத்தில் கமிட் ஆக படம் முடிவதற்குள் அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.

இப்போது காதலனுக்காக சொந்த படம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சொந்த படம் நன்றாக நடந்து முடிந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தினாலும்

இன்னொரு புறம் படம் ஏதாவது ஆனால் சம்பாதித்த மொத்த பணமும் போய் விடும் என்று பதறுகிறார்கள் அவரின் நண்பர்கள்.

பாவம் தான்..!
மேலும் வாசிக்க…

அதிகாலை 2 மணிக்கே கபாலியை தரிசிக்க காத்திருந்த ஜெயராம்..!!

12:50 AM |
தமிழகம் முழுவதும்... இல்லையில்லை உலகம் முழுவதும் இன்று கபாலி தினமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது..ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு ஆவலாக அடித்துப்பிடித்து தியேட்டர்களுக்கு வரும் நிகழ்வு சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு மட்டுமே நடக்க கூடியது.

நம் ஊர் இளவட்ட பிரபலங்கலான சித்தார்த், அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இவர்கள் எல்லோருமே வெற்றிவேல் தியேட்டரில் அதிகாலை காட்சியை பார்க்க வந்துவிட்டனர்.. ஆனால் இதையும் மிஞ்சு வகையில் மலையாள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாசுடன் அதிகாலை 2 மணிக்கே காசி தியேட்டரில் கபாலி படம் பார்க்க வந்துவிட்டார்.

வாசலில் இருந்த கூட்டத்தை கடந்து ஒரு ரசிகனை போலவே அவர் முண்டியடித்துக்கொண்டு நீந்தி சென்றதை பார்க்கும்போது ரஜினியின் வீச்சிற்கு எப்பேர்ப்பட்ட நடிகர்களும் தப்புவதில்லை என்பது தெரிந்தது.. தியேட்டருக்குள் செல்வதற்கு முன் மீடியாவிடம் பேசிய ஜெயராம், “என்னால் படமே பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இதை என்ஜாய் பண்ண முடியுதில்லையா.. நான் வந்ததே இதை என்ஜாய் பண்ணத்தான் இதுபோன்ற காட்சியை இந்தியாவில் வேறு எங்கேயாவது பார்க்கமுடியுமா” என ஒரு ரசிகனாகவே மாறி பரவசத்துடன் பேசினார்.. பின்னர் தனது மகனுடன் அமர்ந்து படத்தை ரசித்துப்பார்த்து, படம் முடிந்தபின்னரே கிளம்பினர் ஜெயராம்.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுக்கு ஆபாச மிரட்டல் செய்த தெலுங்கு ஹீரோவால் பரபரப்பு..!!

12:34 AM |
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஆபாசமாக மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆபாச மிரட்டல்களின் பின்னணியில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்த நடிகரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க நயன்தாரா தரப்பு முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது.  

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்க பிரபல தெலுங்க நடிகர் ஒருவர் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

 ஆனால், நயன்தாரா திடீரென்று மைக்கை வாங்கி இந்த விருதை இயக்குனரும், தன்னுடைய காதலருமான விக்னேஷ் சிவன் கையால் வாங்க விரும்புவதாக கூறினார். இது அந்த தெலுங்கு நடிகருக்கு அவமானமாய் போய்விட்டதாக கருதி அவர் தான் இந்த ஆபாச மிரட்டலின் பின்னணியில் இருக்கிறார் என சந்தேகிக்கின்றனர்.
மேலும் வாசிக்க…

நயன்தாரா இப்படி நடிக்க மறுத்தாரா?!! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

12:09 AM |
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளார்.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உயர்ந்து இருக்கிறார்.

 ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது தமிழில் திருநாள், இருமுகன், காஷ்மோரா ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் இரண்டு புதிய தமிழ் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக பாபுபங்காரம் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த தெலுங்கு படம் நயன்தாராவின் திடீர் கெடு பிடிகளால் திரைக்கு வர முடியாமல் முடங்கி இருப்பதாக படக்குழுவினர் ஆவேசப்படுகின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.

 நயன்தாரா-வெங்கடேஷ் தொடர்பான பாடல் காட்சியொன்றும் சில வசன காட்சிகளும் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது. இவற்றை முடித்து விட்டு இந்த மாதம் இறுதியில் பாபுபங்காரம் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர்.

பாடல் காட்சியில் நயன்தாராவுக்கு அரைகுறை ஆடைகள் உடுத்த கொடுத்து கவர்ச்சியாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நயன்தாரா திடீர் என்று அந்த பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே அந்த படத்துக்காக கொடுத்த கால்ஷீட் திகதிகள்  முடிந்து விட்டன என்றும் பாடல் காட்சிக்காக கூடுதல்திகதிகள் ஒதுக்கி தர முடியாது என்றும் கூறிவிட்டாராம். மூத்த நடிகரான வெங்கடேசுடன் கவர்ச்சி உடையில் நடிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முடியாமல் படக்குழுவினர் தவிக்கின்றனர். இது நயன்தாரா-வெங்கடேஷ் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளதாக தெலுங்கு பட உலகினர் முணுமுணுக்கின்றனர். நயன்தாராவை சமரசப்படுத்தி பாடல் காட்சியில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.

ஏற்கனவே சிம்புவின் இது நம்ம ஆளு படத்திலும் இதே போன்று கால்ஷீட் முடிந்த பிறகு பாடல் காட்சியில் நடிக்க நிர்ப்பந்திப்பதாக குற்றம் சாட்டி அதில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய படங்களில் நடிப்பதற்கு நயன்தாரா இப்போது நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம். காதல் காட்சிகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன். கவர்ச்சி ஆடைகள் அணிய மாட்டேன் என்றெல்லாம் கூறுகிறாராம்.

காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். கவர்ச்சியாக நடிக்க வேண்டாம் என்று காதலர் வற்புறுத்துவதாகவும் அதனாலேயே கவர்ச்சியாக நடிக்க அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

நயன்தாரா குறித்து உருக்கத்துடன் பேசிய விக்னேஷ் சிவன்..!!

1:32 AM |
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த SIIMA விருது விழாவில் சிறந்த இயக்குனர் விருது இவருக்கு கிடைத்தது.

இந்த விருதை பெற்ற பின் இவர் பேசுகையில் ‘நயன்தாரா போல் ஒரு நடிகையை நான் பார்த்ததே இல்லை, அத்தனை அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் நடித்துக்கொடுத்தார்.அவருக்கு என் நன்றி’ என கூறினார்.

விழா ஆரம்பம் முதல் முடிவு வரை இருவரும் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

காதலனுக்காக கொள்கையை மாற்றி கொண்ட நயன்தாரா..!!

2:09 AM |
நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 கனவுகன்னி மட்டும் இல்லை சிறந்த நடிகை என்றும் பேர் எடுத்துவிட்டார். நயன்தாரா ரியல் லைப்யில் கொஞ்சம் பிடிவாதகாரங்க என்று திரை உலகம் சொல்லும் அது உண்மை தான் ஒருவருடன் நடிக்க மாட்டேன் என்றால் நடிக்க மாட்டார் விக்ரம் ஒரு காலத்தில் நயன் பற்றி தவறா பேசிவிட்டார் என்பதுக்காக விக்ரமுடன் நடிக்கவில்லை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பிறகு தான் நடிக்க சமதம் தெரிவித்தார் . அப்படி பட்ட நயன்தாரா தன் கொள்கையை மாற்றிவிட்டாராம் யாருக்காக எதுக்காக தெரியுமா?

சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டாராம்.ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளாராம். காதலன் கேட்டு கொண்டதால் கொள்கையை மாற்றிவிட்டாராம் பாருங்க காதல் செய்யும் மாயம்.
மேலும் வாசிக்க…

காதலருக்காக விஜய் சேதுபதியை பலி போட்ட நயன்தாரா..!!

1:23 AM |
குட்டி மீனை கொன்று அதையே பெரிய மீனுக்கு இரையாக வைக்கிற தந்திரத்தை சினிமாவும் அரசியலும் சிறப்பாகவே செய்யும். அடுத்தவர் சுயநலத்தால் அபாயத்தை டச் பண்ணும் இத்தகைய மீன்களில் ஒருவராக நம்ம விஜய் சேதுபதியும் மாட்டிய கதைதான் இது.

கடந்த வருட ஹிட்டுகளில் முக்கியமான இடத்தில் இருக்கிறது ‘நானும் ரவுடிதான்’ படம். அந்த கூட்டணியை அப்படியே பெயர்த்துக் கொண்டு போனார் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். பொதுவாகவே ஹிட்டான படங்களின் கூட்டணி மறுபடியும் ரிப்பீட் ஆகிறதென்றால் அதன் வியாபாரமே வேறு. அந்த கணக்கில் அமைந்ததுதான் இந்த கூட்டணி. ஆனால் விஜய் சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் ரூபத்தில் வந்தது ஆறடி உயரத்தில் ஒரு இரும்பு கேட். தனியொருவன் பட இயக்குனர் மோகன் ராஜா இயக்க, அதில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசினாராம் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா படத்தில் மீண்டும் நடிக்க விரும்பாத நயன்தாரா, “அந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை” என்று தெளிவாக சொல்லிவிட்டு, “என்னோட நடிக்கணும்னு உங்களுக்கு ஆசை இருக்கா?’ என்றாராம் சிவாவிடம். பின்னாலிருக்கிற திட்டம் தெரியாமல் “ஆமாம்” என்று சிவா தலையாட்டி வைக்க, அங்குதான் இந்த பொல்லாத ட்விஸ்ட் அரங்கேறியது. “விக்னேஷ்சிவன் டைரக்ஷனில் ஏ.எம்.ரத்னம் ஒரு படம் தயாரிக்கிறார். அதில் விஜய் சேதுபதிதான் என்னோட நடிக்கறதா பேச்சு இருக்கு. நீங்க ஓ.கேன்னா நானும் விஜய் சேதுபதியும் வேறு படத்தில் இணைஞ்சுக்குறோம். இந்த படத்தில் நீங்க உள்ள வரலாம்” என்றாராம் நயன்தாரா.

அப்புறமென்ன? நைசாக ஓரம் கட்டப்பட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, சிவகார்த்திகேயன் நயன்தாரா ஜாயின்ட் அடிக்கப் போகிறார்கள். இதில் ஓரமாய் நின்ற கொக்குக்குதான் கொள்ளை லாபம். இன்றைய தேதிப்படி விஜய் சேதுபதியை விட, சிவகார்த்திகேயனின் செல்வாக்குதான் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. வியாபாரத்தில் மேலும் மேலும் லாபம்! அஜீத்திடமிருந்து விலகி வந்தாலும், அதற்கு கொஞ்சமும் சளைக்காத வேறொரு படத்துடன் கம்பீரமாக களத்தில் நிற்கப் போகிறார் ஏ.எம்.ரத்னம்

எல்லாப் புகழும் நயன்தாராவுக்கே!
மேலும் வாசிக்க…
2015 Thediko.com