கன்னடத்தின் மிதிலேயா சீதேயாரு படம் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் பிரகாஷ் ராஜ். தமிழில் டூயட் படம் மூலம் அறிமுகம், தொடர்ச்சியாக பாம்பே, கல்கி, இருவர், அந்தப்புரம், அப்பு, கில்லி, போக்கிரி உள்ளிட்டப் படங்களால் புகழடைந்தார்.
1994ம் ஆண்டு டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்கள் இருவருக்கும் மேகனா, பூஜா, என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
2009ம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்த பிரகாஷ் ராஜ் 2010ம் ஆண்டு பாலிவுட் நடன இயக்குநர் போனி வெர்மாவை திருமணம் செய்தார். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் போனி வெர்மா இருவருக்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது . இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
Tags:
Cinema
,
pirakash raj
,
சினிமா
,
பிரகாஷ் ராஜ்
,
போனி