தமிழில் அஜித் ஹீரோவாக அறிமுகமான அமராவதி படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சங்கவி. தொடர்ந்து விஜய், பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஒருசில படங்களில் நடித்த இவர், பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் திரையை விட்டு ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் இன்று இவர் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடைசியாக இவர் தமிழில் ஆணை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அஜித்
,
சங்கவி
,
சினிமா
,
பிரசாந்த்
,
விஜய்