இந்த படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிச் சுற்று படத்தை பற்றிய விமர்சனம் பிரபல ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.
இதனை படித்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், இந்த படத்தை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ''இந்த பாக்சிங் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன்'' என மைக் டைசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆங்கில பத்திரிகை எழுதிய விமர்சனத்தையும் மைக் டைசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மைக் டைசனை சுமார் 51 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் பின் தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.
மைக் டைசனின் இந்த பகிர்வால், இறுதிச்சுற்று படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மாதவன், ரித்திகா, நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா இயக்கத்தில் இறுதிச்சுற்று வெளியாகி உள்ளது.
Tags:
Cinema
,
Madhavan
,
Rithika
,
இறுதிச்சுற்று
,
சினிமா
,
மாதவன்