மாதவன் நடிப்பில் இறுதிச்சுற்று, சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-2 ஆகிய இரண்டு படங்கள் நேற்று திரைக்கு வந்தது. இதில் இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இறுதிச்சுற்று ஏ செண்டர்களிலும், அரண்மனை பி&சி செண்டர்களிலும் நேற்று நல்ல வசூலை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் இறுதிச்சுற்று படத்திற்கு அதிகம் பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், அரண்மனை பழைய மசாலா பேய் கதை என்றாலும், குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. வசூல் குறித்து விசாரிக்கையில் இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்ததை விட நல்ல வசூலை தான் தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Tags:
Aranmanai2
,
Cinema
,
அரண்மனை-2
,
இறுதிச்சுற்று
,
சினிமா
,
மாதவன்