மாதவன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் இறுதிச்சுற்று படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இப்படம் குத்துச் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.
டிரெய்லரிலேயே பலரையும் கவர்ந்துள்ள இப்படம் ஒரு குத்துச் சண்டை மாஸ்டர், அவருடைய மாணவியை அவரை சேம்பியன் ஆக்கும் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தக்கதை காரணமாக சல்மான்கான், அமீர்கான் ஆகிய இருவரையும் மாதவன் முந்திவிட்டார் என்று சொல்கிறார்கள்.
சல்மான் கான் நடிப்பில் சுல்தான், அமீர்கான் நடிப்பில் தங்கால் ஆகிய இரு படங்களும் இதே குத்துச் சண்டை ஒரு பெண் , அவளை சாம்பியன் ஆக்கும் கதை என உருவாகிவருகிறது.
இந்நிலையில் முன்னதாக மாதவனின் இறுதிச் சுற்று, இந்தியில் சால காதூஸ் என்ற பெயரில் வரவிருக்கிறது. சல்மான்கான். அமீர்கான் ஆகியோரின் படங்களுக்கு முன்பாகவே இந்தப்படம் வருவதால் தழுவல், காப்பி என்ற சர்ச்சைகளில் சிக்கும் வாய்ப்புகளும் குறைவு.
சுல்தான், தங்கால் படங்களின் கதை ஒரே மாதிரியாக இருக்கிறதென்கிற காரணத்தால் சல்மான் கான், அமீர்கான் இருவருக்கும் இடையில் சண்டைகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அமீர்கானை முந்திய மாதவன்
,
சல்மான்
,
சினிமா
,
மாதவன்