பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்திருந்த பசங்க 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதிகமாக சேட்டை செய்யும் குழந்தைகள் நோயாளிகள் அல்ல…அவர்களுக்குள்ளும் நிறைய திறமைகள் இருக்கிறது. அவற்றை பெற்றோர்கள் சரியான முறையில் கண்டறிந்து, அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். மாறாக, அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என்பதை இப்படம் மூலம் அழகாக மக்களுக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
தற்போது படம் வெளியாகி இரண்டு வாரத்திற்கும் மேல் ஆன நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியால் மகிழ்ந்து போன சூர்யா இயக்குநர் பாண்டிராஜிக்கு காரும், இசையமைப்பாளர் அரோல் கெரோலிக்கு தங்க செயினும் பரிசளித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்தைப் பாராட்டி அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தான் அந்த வேடத்தை நழுவவிட்டதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதாவது பசங்க 2வில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்திற்கு முதலில் ஜோதிகாவைத் தான் கேட்டார்களாம். ஆனால் அப்போது 36 வயதினிலே படத்தில் ஜோதிகா பிஸியாக நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அதனால் இந்தப் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கிக் கொடுப்பது ஜோதிகாவிற்கு சிரமமாக இருக்க, நடிக்க முடியாது என்று சொல்லி விட்டாராம். இப்போது பசங்க 2 படத்திற்கும், அமலாபால் பாத்திரத்திற்கும் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து இந்தப் படத்தை நழுவ விட்டு விட்டேனே என்று வருத்தப்பட்டு வருகிறாராம் ஜோதிகா.
அது மட்டும் இல்லாமல் சூர்யாவுடனும் நடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டதுகும் அதாவது இது மாதிரி அழகான கதாபாத்திரத்தில்.
Tags:
Cinema
,
Jothika
,
அமலாபாலலை பார்த்து பொறாமைபடும் ஜோதிகா
,
சினிமா