நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்ற நடிகர் விஷால், நடிகர் சங்க பணிகளுடன் தனது அடுத்த படத்தின் பணிகளையும் தொடங்கிவிட்டார்.
விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கவுள்ளார். ‘மருது’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படமும் கிராமிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ஜீவா’, காக்கிச்சட்டை ஆகிய வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயர் பெற்ற ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் எல்லோராலும் ராசியான நடிகை ஸ்ரீ திவ்யா என்று சொல்லும் போது சிவகார்த்திகேயன் மட்டும் ஏன் ஸ்ரீ திவ்யாவை கழட்டிவிட்டார். என்பது மட்டும் புரியவில்லை தொடர்ந்து இரண்டு ஹிட் குடுத்த நடிகை ஆனால் கீர்த்தியுடன் நடித்த முதல் படமே வெளிவரவில்லை.
பரவா இல்லை நடிகர் சங்க செயலாளர் என்பதை நிருபித்த விஷால் பட வாய்ப்பு இல்லாத நடிகைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ராசியான நடிகை என்ற பட்டமும் வாங்கி கொடுத்துள்ளார்.
ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
வாழ்வு தந்த விஷால்