ஜெயம் ரவி காட்டில் அடைமழை என்று சொல்லலாம் ஆமாம் தொடர் வெற்றி இதனால நல்ல வாய்புகள் பெரிய இயக்குனர்கள் இப்படி கோடம்பாக்கத்தில் மிகவும் பரபரப்பாக இருப்பவர் என்றுகுட சொல்லலாம் .
சூர்யா நடிக்கவிருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தை தற்போது ஜெயம் ரவியை வைத்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.
‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா – கெளதம் மேனன் இணைப்பில் பூஜை போடப்பட்ட திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.
படத்தின் பூஜைக்குப் பிறகு, கதையை முழுமையாக கெளதம் மேனன் தன்னிடம் கூறவில்லை, எனவே இப்படத்தில் இருந்து விலகுவதாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் – சூர்யா இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் விழுந்தது.
தற்போது, சூர்யாவை மீண்டும் சந்தித்து பேசிவிட்டதாகவும், விரைவில் ஒரு படம் பண்ணுவோம் என்று கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சூர்யா நடிக்கவிருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தை தற்போது ஜெயம் ரவியை வைத்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன். ‘தனி ஒருவன்’ படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் பல்வேறு விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்கள் ஜெயம் ரவி நடிக்கும் படங்களுக்கு முன்னுரிமை தர விரும்புகிறார்கள்.
தனது ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் மூலமாகவே ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஜெயம் ரவியை வைத்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன். இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் பணியாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
சினிமா
,
சூர்யா
,
சூர்யா வாய்ப்பை தட்டி பறித்த ஜெயம் ரவி
,
ஜெயம் ரவி