இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், அனிருத்தியின் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திற்க்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
முதலில் சிவகார்த்திகேயனின் அறிமுக பாடலை படமாக்கவிருக்கும் படகுழுவினர் இப்பாடலுக்கும் மட்டும் 2 கோடி ரூபாய் செலவிடப்படவிருப்பதாக கூறி வாய்பிளக்க வைக்கின்றனர். ராஜு சுந்தரம் நடன இயக்குனராக பணிபுரியும் இப்பாடலினை புதிதாக அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் உட்பட சென்னையின் இதர பகுதியில் படம்பிடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறார்களாம்.
வி.எஃப்.எக்ஸூம் பிரதானமாக இடம்பெறும் இப்பாட்டிற்க்கு மகதீரா, புலி போன்ற படங்களில் பணியாற்றிய கமலகண்ணனை வி.எஃப்.எக்ஸ் கண்காணிப்பாளராக நியமித்திருக்கிறதாம் பட குழு. கடந்த சில நாட்களுக்கு முன் ஃபோட்டோ செஷனை நடத்திய படக்குழு, பாலிவுட் பாணியில் மீண்டும் ஓர் ஃபோட்டோ ஷூட்டை இரண்டு மாதங்களுக்கு பின் நடத்தவிருக்கிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஃபிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.
Tags:
சிவகார்த்திகேயனின் அறிமுக பாடல்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா