அப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக இக் கைப்பேசியின் கமெரா இரண்டு வில்லைகளை (Dual Lens) அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதற்காக சீனா, ஜப்பான் மற்றும் தாய்வானின் Largan Technology நிறுவனம் என்பவற்றிலிருந்து இரட்டை வில்லை கமெராக்களைப் பெற்று அப்பிள் நிறுவனம் பரிசோதித்து வருகின்றது.
இதேவேளை தற்போது iPhone, iPad என்பவற்றில் பயன்படுத்தப்படும் கமெராக்களில் 60 சதவீதமானவை தாய்வானைச் சேர்ந்த Largan Technology நிறுவத்தினால் வடிவமைக்கப்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இக்கைப்பேசியில் வேகம் கூடிய Apple A10 வகை Processor உம் இணைக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:
Apple
,
iPhone
,
iPhone 7 Plus
,
iphone6
,
Technology
,
தொழிநுட்பம்