நஸ்ரியா, திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் அவர் மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் அடிபட்டன.
இந்நிலையில் நஸ்ரியா மீண்டும் நடிக்க வர மாட்டாரா என ஏங்கி கிடந்த அவரது ரசிகர்கள், இப்போது அம்மா தாயே கொஞ்ச நாளைக்கு சினிமா பக்கம் வரவேண்டாம்மா.. என கும்பிடு போடாத குறையாக சோஷியல் மீடியாவில் நஸ்ரியாவை ஓட்டுகிறார்களாம்.
காரணம் நஸ்ரியாவின் குண்டான தோற்றம் தானாம். இதே போலத்தான் நடிகை ரீமா கல்லிங்கல்லையும் திருமணம் முடிந்து மீண்டும் நடிக்க வந்தபோது ரசிகர்கள் கிண்டலடித்துள்ளார்கள். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரீமா சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.
நடிகை ரீமா பேசியதாவது:
கல்யாணம் செய்து கொண்டால் ஒரு பெண்ணுக்கு எப்படியும் உடம்பில் மாற்றங்கள் வரும். அது இயற்கை, அதை நாம் ஒன்றும் பண்ண முடியாது. இதற்கு முன் இப்படி பல நடிகைகள் பூரிப்பான உடல்வாகுடன் திருமணத்திற்குப்பின் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்திருக்கிறார்கள். உண்மையான ரசிகர்கள் எங்களது நடிப்பை மட்டுமே பார்ப்பார்கள் என நஸ்ரியாவுக்கும் சேர்த்து வக்காலத்து வாங்கியுள்ளார்.
Tags:
சினிமா
,
நஸ்ரியா
,
நஸ்ரியாவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்
,
ரீமா