கொனட்டி கொனட்டி பாடும் இந்த பாப்பா யாருன்னு தெரியுதா? – வைரல் வீடியோ
நடிகை நஸ்ரியா நஸீம் சிறுமியாக இருந்தபோது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கொனட்டி கொனட்டி பாட்டு பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
நஸ்ரியா நஸீம் நடிக்க வந்த வேகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பொண்ணு பார்க்க மட்டும் அல்ல நல்லாவும் நடிக்குது என்று கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் பெயர் வாங்கினார்.
தனுஷுடன் சேர்ந்து நையாண்டி படத்தில் நடித்து தன்னுடைய தொப்புளை ட்ரெய்லரில் காட்டிவிட்டார்கள் ஆனால், அது என்னுடைய தொப்புள் கிடையாது வேறு ஒரு பெண்ணின் தொப்புள். இன்னும் படத்தில் என்னென்ன காட்டி இருகிறார்கள் என்று தெரியவில்லை என்று பிரச்சனையை பெரிதாக்கி சர்ச்சையில் சிக்கினார். படத்தின் விளம்பரத்திற்காக அந்த பிரச்சனையை கிளப்ப சொன்னது யார் என்பது கூட பின்னர் தெரிய வந்தது.
நஸ்ரியா சிறுவயதில் துபாயில் இருந்தாராம். அப்பொழுது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் பாடிய சுலேகா பாடல் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.