உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் விநியோகிஸ்தரா ஆரம்பித்து, பின்னர் தயாரிப்பளார் அடுத்து ஹீரோ என்று தமிழ் சினிமாவில் கால் பதித்த உதயநிதி ஸ்டாலின். இன்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட நாயகனாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
OK OK முதல் படத்திலே தன் திறமையை நிருபித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது கெத்தாக நடித்துகொண்டு இருக்கும் படம் கெத்து . மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் தற்போது நடித்துகொண்டிருக்கும் படம் கெத்து. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
படத்தின் இறுதி பாடல் காட்சி கடந்த சனிக்கிழமையுடன் முடிந்துவிட்டது என்று கூறிய எமி ஜாக்சன், செங்குத்தான மலை பாறையில் இருந்து தொங்கிக்கொண்டு எடுக்கப்பட்ட அந்த பாடல் காட்சி நாங்கள் தைரியமாக நடித்துள்ளோம் கரணம் தப்பினால் மரணம் அந்த அளவுக்கு ஆபத்தான இடத்தில எங்கள் படபிடிப்பு நடத்தினார்கள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Tags:
உதயநிதி
,
எமி ஜாக்சன்
,
சினிமா
,
மரணத்திலிருந்து உயிர் சினிமா