த்ரிஷாவுக்கு அடுத்து விஜய்யின் ஃபேவரைட் கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால்தான். துப்பாக்கி படத்தில் இணைந்து நடித்த பிறகு விஜய்க்கு பிடித்தமான நடிகையாக மாறிப்போனார்.
அந்த அடிப்படையில்தான் ஜில்லா படத்துக்கு யாரை கதாநாயகியாக புக் பண்ணுவது என்ற பேச்சு வந்தபோது, காஜல் அகர்வாலை சிபாரிசு செய்தார் விஜய். ஜில்லா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
ஒரு படம் தோல்வியடைந்துவிட்டால் அதில் பங்குபெற்றவர்களை மறுபடி அடுத்தடுத்த படத்தில் பணியாற்ற அழைக்க தயங்குவார்கள்.
இந்த சென்ட்டிமெண்ட்டையும் மீறி, ஏற்கனவே இரண்டு முறை தனக்கு ஜோடியாக நடித்தவர் என்பதையும் மீறி அடுத்து நடிக்க உள்ள படத்துக்கு (விஜய் 60) காஜல் அகர்வாலை விஜய் சிபாரிசு செய்தார்.
ஹீரோவின் சிபாரிசு தனக்கு ஸ்ட்ராங்காக இருப்பதை புரிந்து கொண்ட காஜல் அகர்வால் இரண்டு மடங்கு சம்பளம்கேட்டிருக்கிறார்.
கடுப்பான தயாரிப்பாளர் இந்த விஷயத்தை விஜய்யின் கவனத்துக்குக் கொண்டுபோனதோடு, காஜல் அகர்வாலை புக் பண்ண தனக்கு இஷ்டமில்லை என்பதையும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகே கதாநாயகி விஷயத்தில் நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாராம் விஜய்.
உடனே உற்சாகமானவர்கள் அவசர அவசரமாக கீர்த்தி சுரேஷை புக் பண்ணியுள்ளனர்.
ரஜினி முருகன் படம் பார்த்த பிறகு கீர்த்தி சுரேஷ் பற்றி விஜய்க்கு பாசிட்டிவ்வான கருத்து இருந்திருக்கிறது.
விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு கூடிய விரைவில் விஜய்யின் ஃபேவரைட் நாயகியாக கீர்த்தி சுரேஷ் உருவெடுப்பார் என்று நம்பலாம்.
பரதன் இயக்கவிருக்கும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.
Tags:
Cinema
,
காஜல் அகர்வால்
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
துப்பாக்கி
,
த்ரிஷா
,
விஜய் 60
,
ஜில்லா