சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. ஆனால் இன்னும் படத்துக்குப் பெயர் வைத்த பாடில்லை, தொடக்கத்தில் இந்தப்படத்துக்கு வரம் என்றொரு பெயர் சொல்லப்பட்டது.
அதன்பின் வெட்டிவிலாஸ் என்றொரு பெயர் சொல்லப்பட்டது. அது பற்றிய அறிவிப்பும் வரவில்லை, படப்பிடிப்புக்கு நடுவே படத்துக்குப் பெயர் தேடும் வேலையும் நடந்துகொண்டுதான் இருக்கும் போலிருக்கிறது.
இப்போது அடங்காதவன் என்றொரு பெயர் சொல்லப்படுகிறது. இப்போது இந்தப்பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதையாவது அறிவிப்பார்களா அல்லது இதிலும் மாற்றம் இருக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.
Tags:
ajith Next Movie
,
Cinema
,
அடங்காதவன்
,
அஜித்
,
சினிமா