சூடு பிடிக்கும் தெறி வியாபாரம்: ரிலீசுக்கு முன்பே 100 கோடியை தொட்ட பிஸ்னெஸ்..!!

12:44 AM |
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கும் இளைய தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படம் "தெறி". கலைபுலி எஸ்.தாணு தயாரித்து வரும் இப்படத்தின் பாடல்கள் கூட வெளியாகத நிலையில் தற்போது வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

இப்படம் விஜய் - முருகதாஸ் - தாணு கூட்டணியில் வெளியான துப்பாக்கி படத்தின் வியாபாரத்தை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு படம் கோடை விடுமுறைக்கு வெளியாவதால் இப்படத்தின் விநியோக உரிமையை பெற கடும் போட்டி நிலவி வருகிறது.

தெறி படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமை சுமார் 60 கோடி ரூபாய்க்கும், சாட்டிலைட் உரிமை சுமார் 30 கோடி ரூபாய்க்கும், வெளிநாடு உரிமையும் 30 கோடி ரூபாய்க்கும் மற்ற மாநில உரிமைகள் 20 கோடி ரூபாய் வரைக்கும் பேசப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக, வியாபாரத்திலேயே தெறி படம் சுமார் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிடும் என்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

தெறி படைத்த உலக சாதனை பொய்யா?? சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்..!!

9:59 PM |
தெறி படத்தின் டீசர் கடந்த 5ம் தேதியன்று நள்ளிரவு வெளியானது.இதுவரை தெறி டீசருக்கு 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன

லைக்குகளைப் பொறுத்தவரையில் தெறி டீசர்  உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு மீம் பரவியது. அதில் அவஞ்சர் திரைப்படத்தின் டீசர் முதலிடத்திலும், ஜுராசிக் வேர்ல்டு டீசர் இரண்டாவது இடத்திலும், தெறி டீசர் மூன்றாவது இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மைதானா என நாம் அலசிய போது கிடைத்த தகவல்கள்.

 அவஞ்சர்ஸ் – ஏஜ் ஆப் அல்ட்ரான்ஸ் டீசர் கடந்த 2014ம் ஆண்டு யு டியூபில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை இதுவரை 7 கோடியே 84 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது.

ஜுராசிக் வேர்ல்டு டிரைலர் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதை இதுவரை 7 கோடியே 93 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

ஆனால், தெறி டீசரை இதுவரை 67 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்தான் பார்த்துள்ளனர். அதற்குள் லைக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அவஞ்சர்ஸ், ஜுராசிக் வேர்ல்டு ஆகியவற்றின் டீசர், டிரைலர் பார்வையாளர்கள் 7 கோடியைத் தாண்டியுள்ளனர். ஆனால், தெறி டீசரின் பார்வையாளர்கள் 63 லட்சத்தைத்தான் தாண்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் டீசர், டிரைலர் என்ற விதத்தில் தெறி டீசரின் சாதனையைக் கவனிக்கும் அதே சமயத்தில் கொல வெறியின் சாதனையையும் நாம் மறந்துவிட முடியாது. கொல வெறி பாடல் 2011ல் வெளியானது. இதுவரை 10 கோடியே 25 லட்சம் பேர் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரம் லைக்குகள் இந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ளது.


மேலும் வாசிக்க…

'தெறி' விஜய்க்காக மெலடி பாடலை பாடிய பிரபல பாடகர்..!!

12:13 AM |
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை உலுக்கிய நிலையில் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவரவுள்ளது. அனேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'தெறி' படத்தில் பிரபல பாடகர் ஹரிஹரன் ஒரு மெலடி பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்க்கு ஹரிஹரன் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

அவற்றில் நெஞ்சினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘மனசே மனசே’, ‘குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்’, ‘உதயா’ படத்தில் இடம்பெற்ற ‘உதயா உதயா’, ‘துப்பாக்கி’ படத்தில் இடம்பெற்ற ‘குட்டிப்புலி கூட்டம்’ ஆகிய பாடல்கள் விஜய் ரசிகர்களின் மனதை கவர்ந்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் 'தெறி' படத்திலும் விஜய்க்காக ஹரிஹரன் பாடிய மெலடி பாடலும் விஜய் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.
மேலும் வாசிக்க…

தெறி டீசர் சாதனைகளும், சோதனைகளும்..!!

11:06 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் இந்த கோடை விடுமுறைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பல சாதனைகளை செய்து வருகின்றது.உலக அளவில் குறைந்த நேரத்தில் 50 ஆயிரம் லைக்ஸ், இந்திய அளவில் அதிக லைக்ஸ் என பல சாதனைகளை படைத்தது நாம் அறிவோம்.

இந்நிலையில் இந்த டீசர் வந்த சில மணி நேரங்களில் யாரோ ஹாக் செய்தது அனைவரும் அறிந்ததே, தற்போது இந்த டீசர் 45 ஆயிரம் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.

வேதாளம் 60 ஆயிரம் டிஸ்லைக்குகளை பெற, தெறி டீசரும் இதை நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சாதனைகளுடன், சோதனைகளையும் கடந்த வருகின்றது தெறி டீசர்.
மேலும் வாசிக்க…

'தெறி' 2ஆம் பாகம் விஜய்-அட்லி அதிரடி முடிவு..!!

12:48 AM |
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் இந்திய அளவில் சாதனை புரிந்துள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸை லடாக் பகுதியில் எடுத்தபோது விஜய்க்கு இரண்டாம் பாக ஐடியாவை அட்லி கூறியதாகவும், விரைவில் மீண்டும் விஜய்-அட்லி கூட்டணி இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த விஜய் மகள் திவ்யாவுக்கு இரண்டாவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரம் இருக்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்படும் என்றும், இரண்டாம் பாகத்திலும் எமிஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 'தெறி' படத்தின் வியாபாரத்தை கலைப்புலி எஸ்.தாணு தொடங்கிவிட்டதாகவும், முதல்கட்டமாக வெளிநாட்டு உரிமைகளின் வியாபாரத்தையும் அதன்பின்னர் வெளிமாநில, மற்றும் தமிழக ரிலீஸ் உரிமைகளின் வியாபாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தெறி டீசர் குளறுபடி அம்பலம் விரக்தியில் விஜய் ரசிகர்கள்..!!

11:24 PM |
“தெறி” – பெயருக்கு ஏற்றாற்போல் டீசர் வெளியான இரண்டே நாட்களில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என இந்தியாவின் அனைத்து டீசர்களின் சாதனைகளையும் ‘தெறி’க்கவிட்டுவிட்டது. ஆனால், அது அல்ல இப்போ விஷயம். டீசர் வெளியான நாளே காப்புரிமை பிரச்சனை காரணமாக தெறி டீசர் சில மணித்துளிகள் யூ-ட்யூபில் இருந்து நீக்கப்பட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி இது அஜித் ரசிகர்களின் வேலை தான் என்று சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு கொண்டிருந்தனர். ஆனால், யூ-ட்யூப் நிர்வாகமோ தமிழ் டாக்கிஸ் என்ற நிறுவனம் இந்த காணொளி காட்சிக்கு காப்புரிமை கோரியதாகவும் அதனால் டீசர் தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.


தற்பொழுது கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படும் தகவலின் படி டீசரை தெறி படக்குழுவினரே முடக்கியதாக கூறப்படுகிறது. ஏனென்றால், டீசர் பல சாதனைகளை படைத்தும் இதனை பற்றி செய்தி வெளியிட இணைய ஊடகங்கள் தவிர எந்த முன்னணி பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்களும் முன் வரவில்லை. இதனால், டீசரை சிறிது நேரம் முடக்கினால் இது பரபரப்பான செய்தியாகும் மற்றும் டீசரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து ஏப்ரல் மாதம் வெளியாகும் படத்திற்கு இதுவும் ஒரு துணையாக அமையும் என்றே இப்படியான வேலைகளில் இறங்கியதாம் பட நிறுவனம். இதனால் விஜய் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், யூ-ட்யூப் நிறுவனத்திடம் முறையான ஆவணங்களை சமர்பிக்காமல் எந்த ஒரு வீடியோ-விற்கும் நாம் காப்புரிமை கோர முடியாது என்பது உலகறிந்த விஷயம். நிலைமை இப்படியிருக்க, தமிழ் டாக்கிஸ் என்ற நிருவனத்திற்க்கு படத்தயாரிப்பு நிறுவனத்தின் காப்புரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எப்படி கிடைத்திருக்க முடியும் என்பன போன்ற கேள்விகளை முன் வைக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். பெரிய ஹீரோ, சிறந்த இயக்குனர் பிரபலமான குணசித்திர நடிகர் பட்டாளம் என இருந்தும்,

இப்படியான விளம்பரம் தேவைதானா? என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுகின்றனவாம். எது எப்படியோ, தெறி டீசர் தற்போதைய நிலவரப்படி 1,70,000+ லைக்குகளும் 40,000+ டிஸ்-லைக்குகளும் பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க…

தெறி டீசர் பஞ்சாயத்து! அஜீத் ரசிகர்கள் மீது சந்தேகம்..!!

2:30 AM |
நேற்றிரவு வெளியான ‘தெறி’ படத்தின் டீஸரை இதுவரை முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததால் கன ஜோராக காலரை உயர்த்திக் கொண்டு கிளம்ப வைத்திருக்கிறது விஜய் ரசிகர்களை. அதுவும் வெளியிட்ட ஒரே மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேர் டீசரை பார்த்ததால், இந்த முறை திருவிழா கோலம்தான் என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அந்த சந்தோஷத்தில் கல் விழுந்தது சிறிது நேரத்திலேயே! இதில் காப்புரிமை பிரச்சனை இருப்பதாக கூறி, யூ ட்யூப் தளம் அந்த வீடியோவை உடனே நீக்கிவிட்டது. இதனால், ‘கண்ணுக்கு எட்டியது, கருத்துக்கு எட்டலையே?’ என்று கவலையால் தவித்தார்கள் விஜய் ரசிகர்கள்.

வெகு காலமாகவே விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் ஒருவர் சட்டையை மற்றவர் பிடித்துக் கொண்டு இழுபறி நடத்திக் கொண்டிருப்பதால், இந்த காப்புரிமை பிரச்சனை அஜீத் ரசிகர்களால் எறியப்பட்ட கல்லா? அல்லது வேறு ஏதாவது சதியா? என்ற கோணத்தில் தயாரிப்பாளர் தாணுவும் இயக்குனர் அட்லீயும் களத்தில் இறங்க… இந்த நிமிஷம் வரை உருப்படியாக ஒரு க்ளுவும் கிடைக்கவில்லையாம் அவர்களுக்கு.

இதற்கிடையில் இவ்விரு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடும் வார்த்தைகளால் மோதிக் கொண்டது இன்டஸ்ட்ரியை மேலும் திகைக்க வைத்தது. உதயநிதி போன்ற இரு ஹீரோக்களின் அபிமானிகள் “அடிச்சுக்காதீங்கப்பா…” என்று கெஞ்சியும் கூட்டத்தில் சிக்கிய வாழைப்பழம் போலதான் ஆனது அவரது நிலைமை.

தெறி படத்தின் டைரக்டர் அட்லீக்கு அஜீத்திடம் நேரடி பழக்கம் இருந்தாலும், அது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “இந்த வேலையை செய்தது அஜீத் ரசிகர்களாகதான் இருக்கும்” என்று சில இடங்களில் வாயை விட்டதாகவும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அஜீத் பெயரில் சமூக வலைதளங்களில் செயல்படும் தீவிர அபிமானிகளின் செயல்பாடுகளை கண்டறிய தொழில் நுட்ப வல்லுனர்களின் உதவியை நாடியிருக்கிறாராம் அவர்.

“எவ்வளவு செலவானாலும் பரவால்ல தம்பி. தப்பு செஞ்சவங்களை விடக் கூடாது” என்று தயாரிப்பாளர் தாணுவும் கூறி வருவதால், இந்த சண்டை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது!
மேலும் வாசிக்க…

தெறி டீஸரை நாங்கள் முடக்கினோமா? ...தமிழ் டாக்கீஸ் பதில்..!!

3:08 AM |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, பேபி நைனிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தெறி”. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். படத்தின் டீஸர் எப்போது தான் வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இன்று நள்ளிரவு 12மணிக்கு டீஸர் வெளியானது. வெளியாகி இரண்டு மணி நேரங்களில் 2 லட்சத்தை மிக சாதாரணமாகக் கடந்து 1 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் குவித்தது.

இந்நிலையில் திடீரென படத்தின் டீஸர் இன்று காலை  நீக்கப்பட்டு மீண்டும் அதே லின்க்கில் திரும்பியது. இது பலருக்கும் அதிர்ச்சி. அதில் "Theri - Official Teaser.....This video is no longer available due to copyright claim by TamilTalkies" என குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ரசிகர்கள் தமிழ் டாக்கீஸை திட்டி ட்வீட்டுகளையும், ஸ்டேட்டஸ்களையும் போட, தமிழ் டாக்கீஸ் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய போது அதிர்ச்சியானார்கள். நாங்களே டீஸர் வெளியீட்டிற்காகக் காத்திருந்து செய்திகள் போட்டுள்ளோம்.டீஸரைப் பகிர்ந்துள்ளோம்.

நாங்கள் எப்படி டீஸரை முடக்குவோம். நீங்கள் சொல்லித்தான் எங்கள் பெயர் இந்தப் பிரச்னையில் சிக்கியுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் ஹேக்கர்கள் என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர் தமிழ் டாக்கீஸ் குழுவினர்.
ஒரு டீஸர், டிரெய்லர் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியாவது எப்போதும் நடக்கும். ஆனால் இம்முறை வெளியானபின் டீஸர் முடக்கப்பட்டிருப்பது இணைய விஷமிகள் அப்டேட் லெவலைக் காட்டுகிறது என்றே கூறவேண்டும். திருந்துவார்களா விஷமிகள்!
மேலும் வாசிக்க…

ஹீரோயின் இல்லன்னா என்ன? மூன்று கெட்டப் விஜய் போதும் - தெறி டீஸர் விமர்சனம்..!!

12:44 AM |
பல தள்ளிப்போடுதலுக்குப் பிறகு மாஸ் கிளாசாக இறங்கியுள்ளது தெறி டீஸர். விஜய்யின் கண்களும், முகமும் வருவதற்கு முன்பாகவே வந்து நிற்கிறது போலீஸ் ஜீப், பூட்ஸ் காலும், கையில் துப்பாக்கியும்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். படத்தின் கலர்ஃபுல்லாக இரண்டு நாயகிகள் இருப்பினும் டீஸரில் இடம்பெறும் பாக்கியம் என்னவோ மீனாவின் மகள் நைனிகாவிற்குதான்.


மூன்று விஜய் டீஸரில், என்ன மூன்று விஜய்யா?, நாங்கள் இரண்டு கெட்டப்பைத் தானே பார்த்தோம் என்றால் மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்க்கவும் மொட்டையடித்த விஜய் மோட்டார் பைக்கில் கெத்துக் காட்டுவார். போலீஸுக்கான மிடுக்கு, சாட்டை போன்ற உடல்வாகு என்றால் கண்டிப்பாக விஜய் மாஸ் தான். அந்த வகையில் ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ என சொல்லிக்கொண்டே பிரம்பால் டேபிளில் அடிக்கும் காட்சிகள் கண்டிப்பாக நாடி நரம்பெல்லாம் விஜய்யின் பெயர் ஓடும் ரசிகனுக்கு விருந்தான காட்சிதான்.



இந்த டுவிங்கிள் டுவிங்கிள், சற்றே வேதாளம் ‘கண்ணா மூச்சி ரே ரே’ மொமெண்டை நினைவுக்குக் கொண்டு வந்தாலும் ’வேதாளம்’ வசனம் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் பழி வாங்கும் வெறியைக் காட்டும். ஆனால் தெறி வசனம், படத்தின் டீஸர் காட்சிகளிலேயே அவர் ஒரு குழந்தையுடன் அப்பாவாக தோன்றுகிறார் , வில்லன்களை சுளுக்கெடுக்கும் தருவாயில் கூட குழந்தையுடன் பழகிய பாடலுடன் இருப்பது கேரக்டரை அட்லீ கொஞ்சம் நிதானமாகவே படைத்துள்ளது தெரிகிறது. மேலும் குழந்தைகளுக்குப் பிடித்தாற் போல் வந்தால் தான் அது விஜய்.

எல்லாம் சரி இந்த புகைக்குள்ளிலிருந்து விஜய் வருவதும், அல்லது அரை இருட்டில் விஜய்யைக் காட்டுவது ஏற்கனவே பார்த்த துப்பாக்கி, கத்தி டீஸர்களின் பாதிப்பு டக்கென மண்டைக்குள் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. ப்ளீஸ் அடுத்த விஜய் டீஸரிலாவது எடிட்டர்கள் நோ ஸ்மோக்கிங்கை ஃபாலோ பண்ணுங்க,அதே போல் துப்பாக்கியின் பாதிப்பு சில இடங்களில் பளிச்சென தெரிகிறது, ராஜேந்திரனின் ஐயம் வெயிட்டிங், துப்பாக்கியுடன் விஜய் கொடுக்கும் போஸ் என கொஞ்சம் ரிபீட் ரகம். பின்னணி ஜி.வி.தெரியாமல் அனிருத் லைட்டாகத் தெரிகிறார். விடுங்க பாஸ்....ஏழு ஸ்வரங்கள் தானே இருக்கு என மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.


ஸ்கூல் வேன் கவிழ்ந்து விழும் இடத்தில் தெறி போட்ட எடிட்டர் ரூபெனுக்கும், இயக்குநர் அட்லீக்கும் சபாஷ் போடலாம். பல மாஸ் ஹீரோக்களின் டீஸர்களில் ஹீரோக்களின் டயலாக் முடிவிலோ, அல்லது பன்ச்களிலோ தான் பெயர் விழும். இங்கே ஸ்கூல் வேன் விழுவதிலேயே கதைக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் தன்மை தெரிகிறது. 

மேலும் செண்டிமெண்ட் காட்சிகள் தாய்க்குலங்களுக்கு பல்க்காக படத்தில் இருப்பதும் புரிகிறது. என்னப்பா ரெண்டு நாயகிகள் இருந்தும் கடுகளவு கூட காட்டவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருப்பினும், விஜய் வந்தா மட்டும் போதும் என்கிற ரசிகர்களின் மனதை அட்லீ நன்கு புரிந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் தெறி மாஸ்.



இப்படி டீஸர் குறித்து கருத்து சொல்வதற்குள், டீஸர் எங்க பாஸ் என கதற வைத்துவிட்டனர் இணைய விஷமிகள். ஆரம்பமே தெறி’க்கு சோதனை வந்தாலும், விஜய் பாணியில் ஆல் ஈஸ் வெல் சொல்லிவிட்டு அதே லின்க்கில் மீண்டும் டீஸர் தோன்றியுள்ளது. 
மேலும் வாசிக்க…

யூடியூபில் (YouTube) இருந்து நீக்கப்பட்ட விஜய்யின் தெறி டீசர்! நடந்தது என்ன???

11:19 PM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தெறி படத்தின் டீஸர் நேற்றிரவு 12.00 மணிக்கு வெளியானது. வெளியான ஒரு மணிநேரத்திலேயே 2 லட்சம் பார்வையாளர்கள் டீஸரை பார்த்து ரசித்தனர்.

இந்த வீடியோவை தெறி பட தயாரிப்பாளர் தாணு தன்னுடைய யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்பொழுது டீஸர் காப்புரிமை (CopyRight) கேட்டு வீடியோவை யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுபற்றி படத்தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது, “ யாரோ வேண்டுமென்றே காப்புரிமை கேட்டு இவ்வாறு செய்துவிட்டதாகவும், இன்னும் சிறிதுநேரத்தில் மீண்டும் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

இது பற்றி  இயக்குநர் அட்லியிடம் கேட்டபோது, வெளியிட்டதிலிருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் டிரெய்லரை யாரோ சதி செய்து அகற்ரியிருக்கிறார்கள். அது யாரெனக் கண்டுபிடிக்கும் வேலைகள் நடக்கின்றன என்கிறார்.
மேலும் வாசிக்க…

உலக அளவில் தெறி டீசர் நம்பர் 1- அனைத்து சாதனைகளையும் முறியடித்தது..!!

10:31 PM |
தெறி டீசர் நேற்று எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் சரியாக 12.00AM மணிக்கு வந்தது. டீசர் வந்த சில நிமிடங்களிலேயே லைக்ஸ் குவிந்தது.ஒரு மணி நேரத்தில் 56 ஆயிரம் கைக்ஸுகளை பெற்றது,

இதன் மூலம் வேதாளம் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாமல் உலக அளவில் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளது.

மேலும், தற்போது வரை 1.2 லட்சம் லைக்ஸுகளை பெற்றது மட்டுமில்லாமல், 7 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. வாழ்த்துக்கள் தெறி டீம்.
மேலும் வாசிக்க…

விஜய்யின் தெறி டீசர் ஒரு பார்வை..!!

6:11 PM |
இளைய தளபதி ரசிகர்கள் அனைவரும் தெறி படத்தின் டீசர் வெளியிட்டிற்காக காத்திருந்தனர். அதுகேற்ப படத்தின் டீசரும் இன்று வந்துள்ளது.

"Twingle Twingle Little Star"இதுதான் விஜய் படத்தின் டீசரின் Dialogue. விஜய் அவருக்கேற்ற Action, Comedy கலாட்டா போன்றவையும் வைத்து தெரிக்கவிட்டிருக்கிறார். மேலும் அட்லீ இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமாரின் வலுவூட்டும் இசை. போலிஸ் கெட்டப்பில் விஜய்யின் துப்பாக்கி விளையாடியிருக்கிறது.

மாசாக வெளியாகியிருக்கும் தெறி படத்தின் டீசர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் தெறி படத்தின் டீசரை பார்க்க க்ளிக்

மேலும் வாசிக்க…

தெறி... விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் - ராதிகா..!!

2:26 AM |
தெறி திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்று அப்படத்தில் நடித்திருக்கும் நடிகை ராதிகா தெரிவித்திருக்கிறார்.அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தெறி' படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை இன்று நள்ளிரவில் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். சுமார் 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்று கூறுகின்றனர்.ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது.இதனால் இன்று நள்ளிரவில் வெளியாகும் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான ஒரு வரவேற்பு இருக்கிறது.இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ராதிகா விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார்.

"தெறி படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டன. இந்தப்படம் உண்மையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

ராதிகாவின் இந்த வார்த்தைகள் தற்போது விஜய் ரசிகர்களிடையேயான மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. இதனால் டபுள் உற்சாகத்துடன் டீசரை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.


மேலும் வாசிக்க…

தெறி டீசர் வெளியீட்டில் பிரபல திரையரங்கம் புதிய முயற்சி..!!

10:50 PM |
விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் இன்று சிவராத்திரி தான். எப்போது 12:00 AM ஆகும் என காத்திருக்கின்றனர்.

ஆம், இளைய தளபதி விஜய் நடித்த தெறி படத்தின் டீசர் இன்று வரவிருக்கின்றது. இந்நிலையில் இந்த டீசரை திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் வழக்கம் போல் கொண்டாடவுள்ளது.

இதன் புது முயற்சியாக இந்த டீசரை தங்கள் திரையரங்கில் ஒளிப்பரப்புவதை நேரைலையாக சமூக வலைத்தளங்களில் ஒளிப்பரப்பவிருக்கின்றார்களாம். இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் வாசிக்க…

தெறி படத்தை பற்றியும் டீசர் பற்றியும் சில விஷயங்கள்..!!

7:42 AM |

அட்லீ ராஜா ராணி படத்திற்கு பிறகு நீண்ட நாள் காத்திருந்து விஜய்யை வைத்து உருவாக்கும் படம் தெறி. இந்த படம் விஜய்யுன் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார். ஒரு ஒரு கதாபாத்திரத்திற்க்கும் வித்தியாசம் காட்ட ஒரு கெட்டப்பில் நடித்து முடித்த பிறகு இன்னொரு கெட்டப்பில் நடித்திருக்கிறார் விஜய். அதனால் இந்த படம் விஜய்யை மாறுபட்ட கோணத்தில் காட்டும்.  இது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் தொழில் நுட்பம் ஹாலிவுட் நடிகர்கள் என பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது தெறி.

இதன் டீசர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியுடப்படுகிறது. அதில் விஜய் நடித்திருக்கும் மூன்று கெட்டப்கள்  இடம்பெற்றுலதாம் . இதனால் தெறி டீசரை இந்திய அளவில் டிரன்ட் ஆக்க இப்போது இருந்தே விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

விஜய் ரசிகர்கள் உருவாக்கிய பிரமாண்ட போஸ்டர்- புகைப்படம் உள்ளே..!!

2:45 AM |
இளைய தளபதியின் ரசிகர்கள் தெறி டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் காமன் டிபி, ட்ரண்ட் செய்வதற்கான டாக் என ரெடியாகிவிட்டது.

மேலும், தெறி டீசரை பெருமை படுத்தும் விதமாக இளைய தளபதி ரசிகர்கள் 23,000 விஜய் புகைப்படங்களை கொண்டு ஒரு தெறி போஸ்ட்ரை உருவாக்கியுள்ளனர்.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தையே கலக்கி வருகின்றது. இதோ உங்களுக்காக…


மேலும் வாசிக்க…

டீசரை வைத்து கதையைக் கணிக்க முடியாதாம்.. ‘தெறி’ டீ​ம் சவடால்..!!

11:06 PM |
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் தெறி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் குடியரசு தினத்தில் வெளியாகவிருந்த இப்படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்த டீசர் 50 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில் விஜய்யின் மூன்று கெட்டப் காட்சிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிய வந்தள்ளது.

சில டீசரை பார்த்தால் படத்தின் கதையை சற்று கணித்து விட முடியும். ஆனால் இப்படத்தை கணிக்க முடியாது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் இசையை மார்ச் மாதத்திலும் படத்தை ஏப்ரல் மாதத்திலும் வெளியிடவுள்ளனர்.
மேலும் வாசிக்க…

இரவு 12 மணிக்கு வெளியான நடிகர் விஜயின் தெறி பட டீசர் அதிர்ச்சியில் தமிழ் சினிமா..!!

9:46 PM |
மேலும் வாசிக்க…

தெறி மிரட்டும் டீசர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..!!

9:55 PM |
தெறி படத்தை பார்க்க இளைய தளபதி ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் 26ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்த டீசர் 50 நொடிகள் இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், படம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதில் விஜய்யின் கலக்கல் பன்ச் வசனம் ஒன்று இடம்பெறுமாம்.தெறி டீசர் கண்டிப்பாக வேதாளம் டீசரின் சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

தெறி படத்தில் பல்கேரியா வில்லன்..!!

10:32 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்நிலையில் விரைவில் டப்பிங் வேலைகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஒரு அதிபயங்கர சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாம், இதில் பல்கேரியா நாட்டை சேர்ந்த லோபோ என்ற நடிகருடன் விஜய் மோதுவாராம்.

இந்த சண்டைக்காட்சி மிகவும் மிரட்டலாக வந்திருப்பதாகவும், ரசிகர்களை மிகவும் கவரும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com