அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தெறி படத்தின் டீஸர் நேற்றிரவு 12.00 மணிக்கு வெளியானது. வெளியான ஒரு மணிநேரத்திலேயே 2 லட்சம் பார்வையாளர்கள் டீஸரை பார்த்து ரசித்தனர்.
இந்த வீடியோவை தெறி பட தயாரிப்பாளர் தாணு தன்னுடைய யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்பொழுது டீஸர் காப்புரிமை (CopyRight) கேட்டு வீடியோவை யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுபற்றி படத்தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது, “ யாரோ வேண்டுமென்றே காப்புரிமை கேட்டு இவ்வாறு செய்துவிட்டதாகவும், இன்னும் சிறிதுநேரத்தில் மீண்டும் வெளியாகும் என்று கூறுகின்றனர்.
இது பற்றி இயக்குநர் அட்லியிடம் கேட்டபோது, வெளியிட்டதிலிருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் டிரெய்லரை யாரோ சதி செய்து அகற்ரியிருக்கிறார்கள். அது யாரெனக் கண்டுபிடிக்கும் வேலைகள் நடக்கின்றன என்கிறார்.
Tags:
Cinema
,
theri teaser
,
YouTube
,
சினிமா
,
டீசர்
,
தெறி
,
விஜய்