அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, பேபி நைனிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தெறி”. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். படத்தின் டீஸர் எப்போது தான் வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இன்று நள்ளிரவு 12மணிக்கு டீஸர் வெளியானது. வெளியாகி இரண்டு மணி நேரங்களில் 2 லட்சத்தை மிக சாதாரணமாகக் கடந்து 1 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் குவித்தது.
இந்நிலையில் திடீரென படத்தின் டீஸர் இன்று காலை நீக்கப்பட்டு மீண்டும் அதே லின்க்கில் திரும்பியது. இது பலருக்கும் அதிர்ச்சி. அதில் "Theri - Official Teaser.....This video is no longer available due to copyright claim by TamilTalkies" என குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ரசிகர்கள் தமிழ் டாக்கீஸை திட்டி ட்வீட்டுகளையும், ஸ்டேட்டஸ்களையும் போட, தமிழ் டாக்கீஸ் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய போது அதிர்ச்சியானார்கள். நாங்களே டீஸர் வெளியீட்டிற்காகக் காத்திருந்து செய்திகள் போட்டுள்ளோம்.டீஸரைப் பகிர்ந்துள்ளோம்.
நாங்கள் எப்படி டீஸரை முடக்குவோம். நீங்கள் சொல்லித்தான் எங்கள் பெயர் இந்தப் பிரச்னையில் சிக்கியுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் ஹேக்கர்கள் என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர் தமிழ் டாக்கீஸ் குழுவினர்.
ஒரு டீஸர், டிரெய்லர் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியாவது எப்போதும் நடக்கும். ஆனால் இம்முறை வெளியானபின் டீஸர் முடக்கப்பட்டிருப்பது இணைய விஷமிகள் அப்டேட் லெவலைக் காட்டுகிறது என்றே கூறவேண்டும். திருந்துவார்களா விஷமிகள்!
Tags:
Cinema
,
TamilTalkies
,
theri teaser
,
அட்லீ
,
சமந்தா
,
சினிமா
,
விஜய்