தெறி திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்று அப்படத்தில் நடித்திருக்கும் நடிகை ராதிகா தெரிவித்திருக்கிறார்.அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தெறி' படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை இன்று நள்ளிரவில் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். சுமார் 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்று கூறுகின்றனர்.ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது.இதனால் இன்று நள்ளிரவில் வெளியாகும் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான ஒரு வரவேற்பு இருக்கிறது.இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ராதிகா விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார்.
"தெறி படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டன. இந்தப்படம் உண்மையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
ராதிகாவின் இந்த வார்த்தைகள் தற்போது விஜய் ரசிகர்களிடையேயான மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. இதனால் டபுள் உற்சாகத்துடன் டீசரை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.
Tags:
Cinema
,
Theri
,
theri teaser
,
சினிமா
,
தெறி
,
ராதிகா
,
விஜய்