அட்லீ ராஜா ராணி படத்திற்கு பிறகு நீண்ட நாள் காத்திருந்து விஜய்யை வைத்து உருவாக்கும் படம் தெறி. இந்த படம் விஜய்யுன் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார். ஒரு ஒரு கதாபாத்திரத்திற்க்கும் வித்தியாசம் காட்ட ஒரு கெட்டப்பில் நடித்து முடித்த பிறகு இன்னொரு கெட்டப்பில் நடித்திருக்கிறார் விஜய். அதனால் இந்த படம் விஜய்யை மாறுபட்ட கோணத்தில் காட்டும். இது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் தொழில் நுட்பம் ஹாலிவுட் நடிகர்கள் என பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது தெறி.
இதன் டீசர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியுடப்படுகிறது. அதில் விஜய் நடித்திருக்கும் மூன்று கெட்டப்கள் இடம்பெற்றுலதாம் . இதனால் தெறி டீசரை இந்திய அளவில் டிரன்ட் ஆக்க இப்போது இருந்தே விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
Tags:
Cinema
,
theri teaser
,
Vijay
,
சினிமா
,
தெறி
,
விஜய்