“தெறி” – பெயருக்கு ஏற்றாற்போல் டீசர் வெளியான இரண்டே நாட்களில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என இந்தியாவின் அனைத்து டீசர்களின் சாதனைகளையும் ‘தெறி’க்கவிட்டுவிட்டது. ஆனால், அது அல்ல இப்போ விஷயம். டீசர் வெளியான நாளே காப்புரிமை பிரச்சனை காரணமாக தெறி டீசர் சில மணித்துளிகள் யூ-ட்யூபில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி இது அஜித் ரசிகர்களின் வேலை தான் என்று சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு கொண்டிருந்தனர். ஆனால், யூ-ட்யூப் நிர்வாகமோ தமிழ் டாக்கிஸ் என்ற நிறுவனம் இந்த காணொளி காட்சிக்கு காப்புரிமை கோரியதாகவும் அதனால் டீசர் தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
தற்பொழுது கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படும் தகவலின் படி டீசரை தெறி படக்குழுவினரே முடக்கியதாக கூறப்படுகிறது. ஏனென்றால், டீசர் பல சாதனைகளை படைத்தும் இதனை பற்றி செய்தி வெளியிட இணைய ஊடகங்கள் தவிர எந்த முன்னணி பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்களும் முன் வரவில்லை. இதனால், டீசரை சிறிது நேரம் முடக்கினால் இது பரபரப்பான செய்தியாகும் மற்றும் டீசரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து ஏப்ரல் மாதம் வெளியாகும் படத்திற்கு இதுவும் ஒரு துணையாக அமையும் என்றே இப்படியான வேலைகளில் இறங்கியதாம் பட நிறுவனம். இதனால் விஜய் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், யூ-ட்யூப் நிறுவனத்திடம் முறையான ஆவணங்களை சமர்பிக்காமல் எந்த ஒரு வீடியோ-விற்கும் நாம் காப்புரிமை கோர முடியாது என்பது உலகறிந்த விஷயம். நிலைமை இப்படியிருக்க, தமிழ் டாக்கிஸ் என்ற நிருவனத்திற்க்கு படத்தயாரிப்பு நிறுவனத்தின் காப்புரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எப்படி கிடைத்திருக்க முடியும் என்பன போன்ற கேள்விகளை முன் வைக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். பெரிய ஹீரோ, சிறந்த இயக்குனர் பிரபலமான குணசித்திர நடிகர் பட்டாளம் என இருந்தும்,
இப்படியான விளம்பரம் தேவைதானா? என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுகின்றனவாம். எது எப்படியோ, தெறி டீசர் தற்போதைய நிலவரப்படி 1,70,000+ லைக்குகளும் 40,000+ டிஸ்-லைக்குகளும் பெற்றுள்ளது.
Tags:
Cinema
,
theri teaser
,
Vijay fans
,
YouTube
,
சினிமா
,
தெறி
,
விஜய்