அமெரிக்க விண்வெளி மையமான நாசா, செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.இதேவேளை செவ்வாய்க்கு மனிதனை அனுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செவ்வாயில் உருளைக்கிழங்கை பயிரிட நாசா முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, லிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் உதவியுடன் ஆய்வு செய்து வருகிறது.
அங்குள்ள சூழ்நிலை மற்றும் தட்பவெப்பம் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பயிரிட தயாராகிக் கொண்டிருக்கிறது.மேலும் 4500 ரகங்களில் செவ்வாய் கிரகத்தில் பயிரிடுவதற்காக 100 விதமான உருளைக்கிழங்கு வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை பயிரிடுவதற்காக லிமாவில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் ஆன்டெஸ் மலைப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் விஞ்ஞானத்தின் மாபெரும் சாதனையாக ஜின்சியா என்ற மலர்கள் பூத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
Technology
,
செவ்வாய்
,
நாசா
,
மலர்கள்
,
விஞ்ஞானம்
,
ஜின்சியா