ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மைஎஃப்சி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் மிகவும் அட்டகாசமான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. இன்று அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் இந்த கருவியானது உப்பு நீர் மற்றும் காற்றை மின்சாரமாக மாற்றும் திறன் கொண்டிருக்கின்றது. இது எப்படி அனைவருக்கும் பயன் தரும் என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.
சிஇஎஸ் 2016
சந்தையின் மிக முக்கிய கண்காட்சியான சிஇஎஸ் ( நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சி ) மொபைல் போன் பயனர்களுக்காக ஜேக் எனும் பிரத்யேக சார்ஜர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சார்ஜர்
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மைஎஃப்சி நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய வகை சார்ஜர் தண்ணீரை கொண்டு மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது.
பவர் கார்டு
இந்த சார்ஜரில் க்ரெடிட் கார்டு அளவில் பவர் கார்டு மற்றும் சிறிய போர்ட் வழங்கப்பட்டுள்ளதால் இதன் அளவு ஸ்மார்ட்போன் போன்றே இருக்கின்றது.
மின்சாரம்
பவர் கார்டில் இருக்கும் உப்புநீர் காற்றுடன் இணைந்து ரசாயன மாறுதல்களுக்கு பின் மின்சாரத்தை தயாரிக்கும். இந்த மின்சாரத்தை போனிற்கு பயன்படுத்த சீரான கேபிள் மூலம் சார்ஜரில் இணைத்தாலே போதுமானது.
விற்பனை
தற்சமயம் வரை இந்த கருவி விற்பனைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
Technology
,
தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யும்