இணையத்தை உபயோகிக்கும் பலர் பெரும்பாலும் இணையத்தை அணுக உபயோகிக்கும் உலாவி கூகுள் க்ரோம். சிறப்பான வேகத்தையும் தரமான வசதிகயும் கூகுள் க்ரோம் தமது பயனர்களுக்கு வழங்குவதால் இந்த உலாவியை பலரும் தமது கணணி மற்றும் ஸ்மார்ட் போன்களில் நிறுவி உபயோகித்து வருகின்றனர்.
ஆகவே இன்றைய பதிவில் கூகுள் க்ரோம் உடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் கூகுள் க்ரோம் மூலம் பேஸ்புக் அல்லது ஜிமெயில் போன்ற தளங்களுக்கு லொகின் செய்ய எமது கடவுச்சொல்லை டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்தினால் உலாவியின் மேலே வலது மூலையில் கீழ் காட்டியுள்ளவாறு ஒரு வாசகம் தொன்றும்.
இது என்னவென்றால் நாம் லொகின் செய்யும் குறிப்பிட்ட தளத்தினுடைய எமது பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல்லை எமது உலாவியில் சேமித்து வைப்பதற்கான அனுமதியை கேட்கும் வாசகம் ஆகும்.
இவ்வாறு நாம் எமது பயனர் கணக்கு விபரங்களை எமது உலாவியில் சேமித்து வைத்தால் அடுத்த முறை குறிப்பிட்ட பேஸ்புக் தளத்தையோ அல்லது ஜிமெயில் தளத்தையோ எமது கணனியில் இருந்து லொகின் செய்யும் போது பயனர் கணக்கு கடவுச்சொல் போன்ற விபரங்களை டைப் செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக குறிப்பிட்ட தளத்தின் URL-ஐ மட்டும் டைப் செய்து லொகின் செய்து கொள்ள முடியும்.
இந்த வசதியை கூகுள் க்ரோம் பயனர்களின் நேரத்தை சேமிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த வசதியை எமக்கு தெரியாமல் மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி எமது பேஸ்புக் கணக்கின் அல்லது மற்றைய ஏதேனும் ஒரு ஆன்லைன் கணக்கின் கடவுச்சொற்களை தெரிந்து கொள்ள முடியும்.
எவ்வாறு என்றால் நாம் எமது நேரத்தை சேமிப்பதாக நினைத்து கூகுள் க்ரோம்-இல் சேமித்து வைக்கும் கடவுச்சொற்களை மற்றவர்களால் பார்க்க முடியும்.
இவ்வாறு சேமித்து வைத்து இருக்கும் கடவுச்சொற்களை கீழே வழங்கப்பட்டுள்ள 'க்ரோம் பாஸ் வேர்ட் வீவர்' மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
உங்களது கூகுள் க்ரோம் உலாவியை திறவுங்கள்.
அதிலே Settings பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கே show advanced settings என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அதிலே Password and forms என்று இருப்பதில் Manage password என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழ் காட்டியுள்ளவாறு ஒரு திரை தோன்றும்.
இங்கே தான் உங்களுடைய சேமித்து வைக்கப்பட்ட அனைத்து கடவுச்சொற்களும் காணப்படும். இதிலே காட்டப்படிருக்கும் ஏதேனும் ஒரு தளத்தினுடைய பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட்ட அந்த தளத்தை கிளிக் செய்து Show என்று இருப்பதை கிளிக் செய்தால் போதும்.
இப்போது உங்களது பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல் போன்றவைகள் துல்லியமாக காட்டப்படும்.
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது ஆன்லைன் கணக்குகளை யாரேனும் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்களது கூகுள் க்ரோம் உலாவியில் கடவுச்சொல்லை சேமித்து வைப்பதில் இருந்து தவிர்த்து கொள்ளுங்கள்.
ThQ - Techinthamil.info
Tags:
Chrome Saved Password
,
HACK செய்வது எப்படி
,
Technology
,
கூகுள்
,
கூகுள் க்ரோம்