சிக்கியது வீடியோ ஆதாரம் இணையத்தில் கசிந்த 'ஆப்பிள்' ரகசியம்..!!
சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவி சார்ந்த வீடியோ ஆதாரம் ஒன்று ரகசியமாக கசிந்ததோடு இணையத்தில் வேகமாக பரவியும் வருகின்றது. அதன் படி ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வந்த புதிய கருவி குறித்து ரகசியமாய் கசிந்த சில தகவல்களை தொடர்ந்து பாருங்கள்.
இணையத்தில் கசிந்திருக்கும் வீடியோவானாது இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 4 இன்ச் திரை கொண்டிருக்கும் என்றும் எல்டிஈ, ஆப்பிள் பே, ஏ8 பிராசஸர், 1.2 ஜிபிக்கு நிகரான ரேம் மற்றும் 1624 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம் என்பதை குறிக்கின்றது.
மேலும் இந்த கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் ஒரே நிறம் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இதன் விலையை பொருத்த வரை இந்தியாவில் ரூ.37,139.82 வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.