பேஸ்புக் தளத்தில் உள்ள ஒரு பதிவை எமக்கு பிடித்திருந்தால் லைக் (Like) செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயமே.
என்றாலும் வருத்தத்துக்குரிய ஒரு தகவல் பகிரப்படும் போது அல்லது ஆச்சரியமான பதிவுகள் பகிரப்ப்படும்போது அல்லது வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் பகிரப்படும் போது அதனை "Like" செய்வதென்பது அவ்வளவு பொருத்தமான ஒரு செயற்பாடு அல்ல.
எனவே அதிகமானவர்களால் பேஸ்புக் தளத்தில் Dislike செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டது.
எனினும் Dislike என்பதற்கு பதிலாக மேற்குறிப்பிட்டது போன்ற எமது உணர்சிகளை வெளிப்படுத்தக்கூடிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் அறிவித்திருந்தது.
மேலும் இந்த வசதியை அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கி சோதித்து வந்தது.
தற்பொழுது உலகில் இருக்கும் அனைத்து பயனர்களாலும் இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
பேஸ்புக் தளத்தில் தோன்றும் பதிவுகளில் உள்ள லைக் பட்டனை (Like Button) தொடர்ச்சியாக அழுத்தும் போது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான மேலதிக பட்டன்கள் தோன்றும் இனி அதில் பொறுத்தமான பட்டனை தெரிவு செய்து உங்கள் உணர்வை வெளிப்படுத்தலாம்.
லைக் பட்டனை (Like Button) தொடர்ச்சியாக அழுத்தும் போது உங்களுக்கு இந்த வசதி தோன்றவில்லை எனின் கவலை வேண்டாம் அடுத்த சில மணி நேரங்களிலோ அல்லது ஓரிரு நாட்களிலோ உங்களுக்கு இந்த வசதி கிடைத்து விடும்.
ThQ - Tamilinfotech.com
Tags:
Buttons
,
Facebook feeling buttons
,
Technology
,
தொழிநுட்பம்
,
பேஸ்புக்