கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்று கூறப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memory என்பதாகும். RAM தான் நம்முடைய கணிணியின் வேகத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.
பொதுவாக இதன் அளவு 512 MB முதல் 8 GB-இக்கும் அதிகமான அளவில் கிடைக்கிறது. இப்போது இன்னும் அளவில் அதிகரிக்கப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான திறன் கொண்ட Ram வகைகளும் சந்தைக்கு வந்து விட்டது.
இப்படி இருக்கும் RAM-ன் பயன்பாட்டைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம். நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disk சென்று ஏதாவது ஒரு தகவலை தேடும் போது, கணணியானது குறிப்பிட்ட அந்த தகவலை வழங்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். இந்த தாமதத்தை தவிர்க்கவும், விரைவாக கணினியில் இருந்து தகவலைப் பெறவுமே கணனிகள் RAM-ஐ கொண்டுள்ளது.
RAM ஆனது Hard disk-லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை ஏற்கனவே தன்னுள் சேமித்துவைத்துக்கொண்டு நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது.
இதனால் தான் நாம் எமது கணனியில் பெரிய அளவிலான RAM-ஐ இணைத்து உள்ளோம். ஆகவே நமது கணினியின் வேகம் கூடுவதோடு நமக்குத் தேவையான தகவல்களும் கணனியில் இருந்து உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கூடியதாய் இருக்கிறது. இதையும் மீறி கணினியின் வேகம் குறைவடைய பல வாய்ப்புக்கள் உள்ளது.
Hard Disk-கின் ஒரு குறிப்பிட்ட அளவு மெமரியை எப்படி RAM ஆக உபயோகித்து கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்வது என்று பார்ப்போம்.
உங்களது கணணியில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை சென்றடையுங்கள்.
My computer-ஐ Right click செய்து properties > Advanced System Settings > Advanced > Settings
அடுத்து தோன்றும் முகப்பில் Advanced-ஐ கிளிக் செய்யுங்கள்.
அங்கே Virtual Memory-இல் Change என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழே காட்டப்பட்டிருப்பது போல் Automatically manage... எனும் டிக்கை எடுத்து விடுங்கள். அடுத்து உங்களது கணனியின் C டிரைவ்-ஐ தெரிவு செய்யுங்கள்.
கீழே நான் குறிப்பிட்டு காட்டியிருப்பது போல் C டிரைவ்-இலிருந்து 6141 MB அளவு வரை RAM ஆக உபயோகிக்கலாம்.
அடுத்ததாக கீழே காட்டப்பட்டிருப்பது போல் Custom Size என்பதை தெரிவு செய்யுங்கள்.
அங்கே Recommended என்பதில் காட்டப்பட்ட மெமரி அளவை நான் கீழே காட்டியிருப்பது போல் டைப் செய்யுங்கள். Initial Size, Maximum Size என்று இருக்கும் இரண்டிலும் மெமரி-யின் அளவை டைப் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து Set என்பதை செய்யுங்கள்.
இறுதியாக OK என்பதை கிளிக் செய்யுங்கள்
குறிப்பு
Recommended என்பதில் காட்டப்பட்டிருக்கும் மெமரி-யின் அளவை விட அதிகமாக வைத்து Virtual Memory உருவாக்க வேண்டாம்.
அவ்வளவு தான் நண்பர்களே. இப்போது உங்கள் கணணியை ஒரு முறை Restart செய்து விட்டு மறுபடியும் உபயோகிக்க தொடங்குங்கள். நிச்சியமாக உங்களது கணனியின் வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
Tags:
computer
,
Hard Disk
,
Ram
,
Random Access Memory
,
Restart
,
Technology