ஐ.ஏ.எஸ். அதிகாரி, வக்கீல், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரி, சினிமா நடிகை, என கூறி பல பேரிடம் பண மோசடி செய்துள்ள மோசடி பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் குஷ்பு சர்மா (25) பலே மோசடி பெண்ணான இவர் சமீபத்தில் பெங்களூரில் சங்கீத் யாங்கி என்னும் வக்கில் வீட்டுக்கு சென்று தானும் உச்ச நீதிமன்றத்தில் வக்கீலாக இருப்பதாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார்.
அப்போது சங்கீத் யாங்கி பெங்களூர் நகரில் உள்ள யூ.பி.சிட்டி மாலில் எனக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது என குஷ்புவிடம் கூற அதற்கு குஷ்பு சர்மா, எனது தந்தை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவருக்கும் யூ.பி.சிட்டி மாலில் பங்கு இருக்கிறது. எனவே, உங்களுக்கு இடம் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.
இதற்காக அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை குஷ்பு பெற்று கொண்டார். பின்னர் சங்கீத் அவரை தொடர்பு கொண்ட போது குஷ்புவின் கைபேசி சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சங்கீத் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.
பின்னர் பொலிஸ் இது குறித்து விசாரித்ததில் அந்த குஷ்பு மிக பெரிய மோசடி ராணி என்பதும் வெறும் எட்டாம் வகுப்பு படித்து விட்டு ஐ.ஏ.எஸ், வக்கீல், இன்ஜினியர் என இதுவரை பல பேரை ஏமாற்றி பல முறை சிறைக்கு சென்றிருப்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது.
தற்போது அவர் தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதை உறுதி செய்த பொலிசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
இன்னும் அவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என தெரிந்து கொள்ள குஷ்புவிடம் தற்போது தீவிர விசாரனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
News
,
குஷ்பு
,
குஷ்பு சர்மா
,
சினிமா நடிகை
,
பண மோசடி