நீயா நானா நிகழ்ச்சி பற்றியும் அதை தொகுத்து வழங்கும் கோபிநாத் பற்றியும் ஒரு விரிவான அலசல் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்லி மீடியாக்களின் போக்கு பற்றி கவலைப்பட்டிருந்தார் ஒரு நண்பர்.
தங்கள் அணியினருக்கு கவனமாக பலமுறை வாய்ப்பு மறுக்க பட்டதாகவும் ஒருதலை பட்சமாக பேசுவதாகவும் சொல்லியிருந்தார். சில இடங்களில் நிகழ்ச்சி பற்றியும், கோபிநாத் பற்றியும் வசை பாடப்பட்டிருந்தது.
அப்பதிவிற்கு மொத்தம் 47 பின்னூட்டங்கள். ஆச்சர்யமாக இருந்தது! அத்தனை பின்னூட்டங்களும் அப்பதிவிற்கு சாதகமாகவே இருந்தது. ஒரு பின்னூட்டம் கூட மாற்று கருத்து கொண்டதாக இல்லை. யாருமே மாற்று கருத்து சொல்லவில்லையா? அல்லது மாற்று கருத்து சொல்லப்பட்டவர்கள் கவனமாக தவிர்க்கப்பட்டர்களா?
பொதுவாக இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களை பொறுத்த வரை துளியும் சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒரு பெயரை வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்துக்களோடு ஒப்பிடும் போது விஜய் டிவியின் நீயா? நானா? எப்பவுமே டாப் தான்.
சமூகம் சார்ந்த கருத்துக்களை விவாதிக்கும் போது ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களையே மனதில் கொள்ள வேண்டும். இரண்டு அணியினரிடமும் இருந்து கூறப்படும் சாதக பாதக அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். நமது பேச்சு திறனையும் சிந்திக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம். அதை விடுத்து எந்த அணி சிறந்தது என்று பார்த்து கொண்டிருக்கக்கூடாது. இது அதற்கான நிகழ்ச்சியும் இல்லை.
சில விளக்கங்கள்:
விஜய் டிவியின் நீயா? நானா? “பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?”,“பெண்களின் கூந்தலில் இருப்பது உண்மையான மயிரா?, போலி மயிரா?”என்பது போன்ற பொருள் பொதிந்த மயிர் பிளக்கும் விவாதங்களே அதிகம் ஒலி/ளி பரப்பியிருப்பதாக அறிகிறேன். – பதிவர்.
அனைவரும் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். நீயா? நானா? நிகழ்ச்சி ஒன்றும் சமூக மாற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும் நிகழ்ச்சி இல்லை. புதிய சிந்தனைகளை உள்ளடக்கி அனைத்து தரப்பு மக்களையும் கவருவதற்காகவும் ஒளி பரப்பப்படும் நிகழ்ச்சியே. இதில் பல்வேறு தலைப்புகளை கொண்டு விவாதம் நடத்தப்படுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
மேற்கூறிய தலைப்புகளில் எத்தனை நிகழ்சிகளை பார்த்தீர்கள்?
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் என்பவர் பல்வேறு கருத்துகள் மக்களை சென்றடைய செய்யும் திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோ மக்களை மடையர்களாகவும், தங்களை நாயகர்களாகவும் நினைக்கின்றனர்.- பதிவர்.
மக்களின் வாழ்க்கை போன்ற முக்கியமான பிரசினைகளை உங்கள் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்து மக்களுக்கு தவறான தகவல்களை தருவதற்கு பதில், உங்கள் வழக்கமான பாணியில் “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?” “கூந்தல் இயற்கையானதுதானா?” என்பது போன்ற தலைப்புகளிலேயே விவாதம் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்!. – பதிவர்.
நீயா? நானா? நிகழ்ச்சி முட்டாள்கள் மட்டுமே பார்ப்பது. கோபிநாத் அவர்களில் மிகப்பெரிய முட்டாள். – பின்நூட்டமிட்டவர்களில் பலர்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி எடுத்து நிகழ்ச்சியை டக்கென முடித்து விடுவார். – பின்னூட்டம்.
கோபிநாத்தை பொறுத்த வரை அவர் ஒரு எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், மிக சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், சிறந்த மேதை என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. பதிவர் நண்பர் யாரை மனதில் கொண்டு சொன்னார் என்பது தெரியவில்லை.
நண்பர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் காணொளியை பார்த்தேன். இரு அணியினருக்கும் விவாதங்கள் சரியாகவே நடந்தது. ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. விஷயங்கள் தெரிந்தவர், பேச்சு திறமை மிக்கவர் அதிகம் பேசுகிறார். அவ்வளவே!
( நண்பர் நிகழ்ச்சியின் பெரும் பகுதி முன் வரிசையில் அமர்ந்து கொண்டு காலை மட்டுமே ஆட்டிக்கொண்டிருந்தார். பேசவும் முற்படவில்லை. இறுதி வரை அவர் பேசினாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை )
இவர் எதை வைத்துக்கொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டவில்லை என்று கூறுகிறார் என்பதும் தெரியவில்லை.
இந்த மாதிரியான டாக் ஷோ வில் நேரத்தை கடத்தாமல் உரிய நேரத்தில் நிறுத்தி அப்படியே சமாளித்து முட்டித்து வைக்கும் திறனும் வேண்டும்.
அந்த (தேவையான) இடங்களில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் இருப்பதில் தவறேதும் இல்லை.
பின்னூட்டம் மட்டுமே இடும் நாம், எதுவுமே பேசாமல் முன்வரிசையில் அமர்ந்து கொண்டு காலை மட்டுமே ஆட்டிக்கொண்டிருந்த நாமே நம்மை இவ்வவளவு அறிவாளிகளாய் பார்க்கும் போது, தொலை நோக்கு பார்வை கொண்ட, பேச்சாற்றல் மிக்க, தொகுப்பாளரான அவரும் அறிவாளியாகத்தான் இருப்பார் என்றே நினைக்கறேன்.
குறிப்பு 1:
கோபிநாத் பெற்ற விருதுகள்:
American Government Invitation to participate in International Visitors Programme (2004)
Young International award by “India Today” Magazine (2007)
Best Anchor of the State by “ஆனந்த விகடன்” (2007,2008)
Invited for the International Health Conference, Sydney (2007)
Outstanding Young Indian by Junior Chamber International(JCI)(2008)
இவ்விருதுகள் சாதாரண குப்பனுக்கோ அல்லது சுப்பனுக்கோ கொடுத்துவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
Tags:
News
,
கோபிநாத்
,
நீயா? நானா?