உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள இயலாத காரணத்தால் மத்தியப் பிரதேசத்தில் என்ஜினியரிங் பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதியில் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Tags:
News
,
என்ஜினியரிங் மாணவி தற்கொலை