இவர்கள் இரட்டையர்கள் ஆனால் வெவ்வேறு ஆண்டில் பிறந்தவர்கள்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 2015 முடிந்து 2016 ம் ஆண்டு பிறக்கும் வேளையில் ஒரு தம்பதியருக்கு இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது.
கலிஃபோரினியா அருகே சான் டியகோ என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் மேரிபெல் என்பவருக்கு, 2015 டிசம்பர் மாதம் 31ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
நள்ளிரவில் 2015ஆம் ஆண்டு முடியும் கடைசி விநாடிகளில் மேரிபெல் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார், அப்போது நேரம் 11.59 ஆகும்.
அடுத்த 2வது நிமிடத்தில் மேரிபெல் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.,அப்போது 2016 பிறந்து விட்டது. அதாவது 12.01 மணிக்கு குழந்தையை ஈன்றார்.
2015 ஆம் ஆண்டு முடிந்து, 2016 புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு அதிசயத்தக்க நிகழ்வாகி விட்டது.
அதாவது இரட்டை குழந்தைகளின் பிறந்த ஆண்டு வெவ்வேறாக இருக்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி தற்போது உலகம் முழுக்க பரவி பிரபலமாகி வருகிறது.