தீபாவளி பண்டிகையின்போது யதார்த்தமாக தீப ஒளியுடன் எடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனம் தனது குளோபல் விளம்பரங்களில் பயன்படுத்த தேர்வு செய்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர் ஆஷிஷ். இவரது மனைவி ரைனா நானயா. கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஆஷிஷ் தனது மனைவி ரைனா சிகப்பு வர்ண புடவையில் கையில் தீபத்துடன் இருப்பது போல தனது ஐ போன் 6ல் புகைப்படங்களை எடுத்தார். அந்த புகைப்படம் மிக அழகாகவும் ரைனாவை தெய்வீக கலையுடன் ஒரு தேவதை போல காட்டியது.
ஆஷிஷ், பின்னர் அந்த புகைப்படத்தை ஐபோன் 6ல் எடுக்கப்பட்டதாக #ShotOniPhone6S என ஹேஸ்டேக் உருவாக்கி இணையதளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த ஆப்பிள் நிறுவனம் அந்த புகைப்படத்தை தனது விளம்பர நோக்கத்துக்காக தேர்வு செய்திருக்கிறது. இந்த போட்டியில் உலகம் முழுக்க இருந்து மிகச்சிறந்த புகைப்பட கலைஞர்கள் 41 பேர் 53 புகைப்படங்களையும் அனுப்பி இருந்தனர். ஆனால் ரைனாவின் புகைப்படம் தேர்வாகியிருப்பதாக டைம் மேகசின் தெரிவித்துள்ளது.
தற்போது ரைனாவின் புகைப்படங்களை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனம் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்து விட்டது. இதனைத் தொடர்ந்து ரைனாவுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏராளமானோர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் விரும்புகின்றனர்.
இது குறித்து ஆஷிஷ் தெரிவிக்கையில், ”தீபாவளிப் பண்டிகையின் போது ரைனா எனது தாயாருக்கு தீபங்களை ஏற்ற உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த நான், கையில் தட்டு நிறைய தீபங்ளுடன் ரைனா வந்து கொண்டிருந்ததை பார்த்தேன். தீப ஒளியில் அவரது முகம் தெய்வீக கலையுடன் பிரகாசித்தது. அதனை அப்படியே எனது ஐபோனில் புகைப்படமாக பதிவு செய்தேன். ஒரு கணவராக காதலுடன் பதிவு செய்த அந்த புகைப்படம் இப்போது உலகையே வென்று விட்டது ” என்றார்.
Tags:
Apple
,
iPhone
,
News
,
ஆப்பிள்
,
ஆஷிஷ்
,
ரைனா நானயா