இலங்கைப் பெண்ணொருவர் , இந்திய அணி வீரர் விராத் கோஹ்லி , அவரது முகாமையாளரிடையே இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவமொன்று தொடர்பில் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சம்பவத்தன்று இந்திய அணி வீர ர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள ஹோட்டலில் அந்நாட்டில் வசிக்கும் இலங்கைப் பெண் காலை உணவு உண்ணச் சென்றுள்ளார்.
இதன்போது அங்குவந்துள்ள கோஹ்லியின் முகாமையாளர் “ காலை உணவின் போது இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த இலங்கைப் பெண் காலை உணவின்போது என்ன முடியாது? எனக் கேட்டுள்ளார்.
இதற்கு கோஹ்லியின் முகாமையாளர் “ படங்கள்” எனத் தெரிவித்துள்ளார். அதற்கு இலங்கைப் பெண் “படங்கள்? யாருடன் எனக் கேட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட கோஹ்லி , “ இல்லை நீங்கள் என்னுடன் படம் எடுக்க வருவதாக நினைத்துக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கைப் பெண் “ நான் ஏன் உங்களுடன் படம் எடுத்துக்கொள்ள வேண்டும், எனக் கேட்டுள்ளார்.
இதன்போது கோஹ்லியின் முகம் அதிர்ச்சியில் உறைந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு படி மேலே சென்ற இலங்கைப் பெண் கோஹ்லியைப் பார்த்து “ நீங்கள் யார்? , நீங்கள் என்ன பிரபலமானவரா? “ எனக் கேட்டு அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மேலும் ஒரு படி மேலே சென்று ஹோட்டலின், உணவக முகாமையாளரிடம் இந்திய இளைஞன் தன்னை தொந்தரவு செய்வதாக முறைப்பாடும் செய்துள்ளார்.
இத்தகவலை குறித்த பெண்ணின் கணவரே பேஸ்புக்கில் பதிந்துள்ளார்.
Tags:
Cricket
,
News
,
virat kohli
,
கோஹ்லி