அஜித் நீண்ட நாட்களாக மாஸ் வகை படங்களை மட்டுமே நடித்து வந்தார். இதிலிருந்து கொஞ்சம் விலகி மாஸ் மட்டுமில்லாமல் கிளாஸ் என இரண்டிலும் இரட்டை சவாரி செய்து ஹிட் அடித்தார் என்னை அறிந்தால் படத்தின் மூலம்.
எப்போதும் இணையும் இந்த கூட்டணி என ஆவலுடன் காத்திருந்த கௌதம்-அஜித்-ஹாரிஸ் இப்படத்தின் மூலம் இணைந்தே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது.
அஜித் மாஸ் முகமூடியை கழட்டி வைத்து, கதைக்கு தேவையான கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார், பல வருட உழைப்பிற்கு பரிசாக அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லானது என்னை அறிந்தால்.
எந்த விழா காலம் எல்லாம் சாதரண நாளில் வந்து ரூ 11 கோடி, முதல் நாள் தமிழகத்தில் வசூல் செய்து சாதனை புரிந்தது. ஏன், தற்போது சம்மந்தம் இல்லாமல் என்னை அறிந்தால் பழைய கதையை சொல்கிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது.
அது, வேறு ஒன்றும் இல்லை என்னை அறிந்தால் படம் வந்து இன்றுடன் 1 வருடம் முடிகின்றது, இதை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் #1YearOfBBYennaiArindhaal என்ற டாக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர். Thediko சார்பாக என்னை அறிந்தால் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
Tags:
Ajith
,
Cinema
,
அஜித்
,
என்னை அறிந்தால்
,
சினிமா