அஜித் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாம்லி தற்போது விக்ரம்பிரபுவுடன் ‘வீரசிவாஜி’ என்ற தமிழ்ப்படத்திலும் மேலும் ஒரு தெலுங்கு, ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகின்றார்.
தனுஷின் கொடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில் ஷாம்லி பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அவரை பற்றிய மற்றும் அவர் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், ஷாமிலி இதுவரை எந்த சமூக வலைத்தளங்களிலும் கணக்கு வைத்திருக்கவில்லை என்றும், அவ்வாறு கணக்கு ஆரம்பித்தால் அவரே அதை அதிகார்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவரது தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ஷாமிலி பெயரில் இருக்கும் போலி டுவிட்டர் அக்கவுண்டின் ஃபாலோயர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:
Ajith
,
Ajith Family Member Fake
,
Cinema
,
அஜித்
,
சினிமா