விக்ரமின் காலை எடுக்க வேண்டிய சூழல் ஜிம் ட்ரைனர் திடுக் தகவல்..!!

10:22 PM |
தமிழ் சினிமாவில் படத்துக்கு படம் வித்தியாசம் என்று இல்லாமல் தன்னையே வித்தியாசப்படுத்தி காட்டுபவர் நடிகர் விக்ரம். இவர் ஓவர் ஜிம் பிரியர், இவருடைய ஜிம் ட்ரைனர் பரத் ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரமை பற்றி பல விஷயங்களை பகிர்ந்தார்.

அவருடைய வில் பவருக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது, பொதுவாக ஒருத்தருக்கு வெயிட் குறைக்க வேண்டும் என்றால் Leg Workout அதிகம் செய்ய வேண்டும், ஆனால் அவரால் Leg Workout பண்ண முடியாது, பாதி கால் தான் அவருக்கு மடங்கும்.

அவருக்கு ஆரம்ப காலத்தில் காலில் பெரிய காயம் ஏற்பட்டது, ஒரு பைக் விபத்தில் அவருடைய காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது என்ற திடுக் தகவலை கூறிய அவர். தொடர்ந்து அதையெல்லாம் விக்ரம் அவருடைய வில் பவரின் மூலம் கடந்து வந்தவர் விக்ரம் என்றார்.
மேலும் வாசிக்க…

இருமுகன் விமர்சனம் - Irumugan Review

11:11 PM |
நடிகர்கள் : விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, ரித்விகா, பாலா, கருணாகரன் மற்றும் பலர்.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : ஆர்டி. ராஜசேகர்
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீநிவாசன்
இயக்கம் : ஆனந்த் சங்கர்
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : ஷிபுதமீன்ஸ்

கதைக்களம்…

ஒரு 75 வயது முதியவர் தனி ஆளாக இந்தியன் எம்பஸியின் அலுவலக ஊழியர்களை தாக்குகிறார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகிறது.

அவரால் எப்படி சாத்தியமானது? அவர் பயன்படுத்திய ஹின்ஹேலரில்  இவ்வளவு பெரிய சக்தி உருவானது எப்படி? என அறிய விக்ரமின் உதவியை நாடுகின்றனர்.

விக்ரமை நாட என்ன காரணம்? அவரின் பிளாஷ்பேக் என்ன? அந்த ஹின்ஹேலரி பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

அகிலன் மற்றும் லவ் என்ற இரு கேரக்டர்களில் தன்னை மீண்டும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

உடல் அமைப்பில் மாற்றம் இல்லையென்றாலும் உடல் அசைவில் மாற்றம் செய்து ரசிக்க செய்திருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்கிறார். ஹின்ஹேலரை முகர்ந்த பின் வரும் சண்டைகளில் கூடுதல் பலம் தெரிகிறது.

லவ் கேரக்டரில் ஜொலிக்கிறார் விக்ரம். ஆனால் வளவளவென பேசிக்கொண்டே இருப்பது போரடிக்கிறது.

வெறும் கிளாமர் மட்டுமில்லை தன்னாலும் ஆக்ஷனிலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நயன்தாரா.

இவரின் கேரக்டர் ஜஸ்ட் ஒரு பாடலில் முடிந்துவிடுகிறதே என் சோர்வடையும் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் வந்து சூடேற்றுகிறார்.

திறமையான நடிகை நித்யா மேனனை இதில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவர் இறக்கும்போது கண்கலங்க வைக்கிறார்.

கபாலி ரித்விகாவின் நிலைமை அந்தோ பரிதாபம்.

நாங்களும் இருக்கிறோம் என நாசர், கருணாகரன், தம்பிராமையா வந்து செல்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் படம் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் ஒரு மெலோடி தேவையா?

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் மலேசியா சிறைச்சாலை முதல், ஹேலேனா பாடல்கள் வரை கண்களுக்கு விருந்து.

படத்தின் ப்ளஸ்…

விக்ரமின் இரு மாறுபட்ட நடிப்பு

வித்தியாசமான வில்லன் திரைக்கதை மற்றும் கேரக்டர்கள்

மெடிக்கல் துறை மற்றும் எக்ஸ்போர்ட் துறையில் நடக்கும் ஊழல்களை சுட்டி காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்….

லவ்வுல்ல சருக்கலாம். இந்த லவ்வையே சருக்க வச்சிட்ட போன்ற வசனங்கள் அடிக்கடி வருவது சலிப்பை தட்டுகிறது.

அகிலன் மற்றும் லவ் – இரு குரலிலும் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.

இன்று செல்போன் உபயோகிப்பவர்கள் பாஸ்வேர்ட்டு போட்டு லாக் செய்துதான் வைக்கின்றனர். ஆனால் விக்ரம் ஈசியாக மற்றவரின் போனை எடுத்து பேசுவது எப்படி எனத் தெரியவில்லை.

முதல்பாதி விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இந்த இருமுகனுக்கு ஹின்ஹேலரை விட எக்ஸ்ட்ரா பவர் கிடைத்திருக்கும்.

இயக்குனர் பற்றி…

அரிமா நம்பியில் கவனம் ஈர்த்த ஆனந்த் சங்கர் இதில் வித்தியாசமான கதையை கையாண்டு இருக்கிறார்.

ஸ்பீடு ஹின்ஹேலர் என்ற புதிய டெக்னிக்கை சொல்லி, அதற்கு ஹிட்லரின் வரலாறையும் சொல்லியிருப்பது கவனிக்க வைக்கிறது.

ஒரு ஸ்டைலிஷ்ஷான கதையை சில லாஜிக் மீறல்களோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இருமுகன்… ஸ்பீடு மகன்
மேலும் வாசிக்க…

ஸ்ரேயாவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்..!!

12:11 AM |
விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில், லட்டு லட்டு ரெண்டு லட்டு -என்ற பாடலுக்கு அவருடன் குத்தாட்டமாடியவர் ஸ்ரேயா. அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று நடித்து வந்தவர் கார்த்தி நடித்த தோழா படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவர்,

இப்போது சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்துள்ள வேடத்தில் நடிக்க திரிஷா உள்ளிட்ட பல நடிகைகள் மறுத்து விட்டபோது, ஸ்ரேயா எந்தவித தயக்கமும் இன்றி நடித்துக்கொடுத்துள்ளார்.

அதோடு, மொத்தம் 16 நாட்களாக திண்டுக்கல்லில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்ரேயா படத்தை முடித்துக்கொடுத்ததும் அங்கிருந்தபடியே மும்பை பறந்து விட்டாராம்.

மேலும், இந்த டிரிபிள் ஏ -படத்தில் அப்பா சிம்புவின் மனைவியாக நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு இரட்டை குழந்தை பிறக்குமாம். அந்த இரண்டு குழந்தைகளும் பின்னர் இரண்டு சிம்புக்களாக நடித்துள்ளார்களாம்.

அந்த வகையில், இரண்டு சிம்புக்களும் குழந்தையாக இருக்கும்போது அவர்களிடம் பாசம் கட்டும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரேயா, பலமுறை ஸ்பாட்டில் கைதட்டல் வாங்கினாராம். அந்த அளவுக்கு குழந்தை சிம்புக்களிடம் பாசத்தை கொட்டி நடித்துள்ளாராம் ஸ்ரேயா.
மேலும் வாசிக்க…

பெறுமதியான பொருளை தொலைத்த விக்ரமின் மகள்..!!

12:02 AM |
சாமி, அருள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்ரம். இவருடைய மகள் அக்ஷிதா (வயது 22).

 சமீபத்தில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் கொள்ளு பேரனுக்கும், அக்ஷிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அக்ஷிதா நேற்று மாலை ஆயிரம் விளக்கு பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆயிரம் விளக்கு, காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு நான் இன்று (நேற்று) ஐஸ்கிரீம் சாப்பிட சென்றிருந்தேன்.ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, வெளியில் வந்து பார்த்த போது, எனது கையில் அணிந்து இருந்த வைர மோதிரத்தை காணவில்லை. யாரோ அதை திருடி சென்றுவிட்டனர். மோதிரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் புகார் மனு வழங்கியுள்ளார்.

திருட்டு போன வைர மோதிரத்தின் மதிப்பு இந்திய ரூபாவில் 12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆயிரம் விளக்கு பொலிஸார் அக்ஷிதா கொடுத்த புகார் மனு தொடர்பாக நேற்று இரவு வழக்குப்பதிவு செய்தனர்.

குறிப்பிட்ட ஐஸ்கிரீம் கடையில் அதிரடி விசாரணை நடத்தினார்கள். நேற்று இரவு வரை மோதிரம் கிடைக்கவில்லை. மோதிரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க…

Iru Mugan - Official Trailer | Vikram | Nayantara | Anand Shankar | Harris Jayaraj

11:04 PM |
மேலும் வாசிக்க…

ஆகஸ்டில் சமந்தாவின் திருமண அறிவிப்பு..!!

3:47 AM |
தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார். அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்படுகிறது.

இதுவரை இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, தற்போது இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சமந்தா – நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பரில் நடைபெறும் எனவும் இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் வாசிக்க…

விக்ரம் மகளுக்கும் கலைஞர் பேரனுக்கும் எப்படி நிச்சயம் ஆனது தெரியுமா??

10:47 PM |
விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கு அடுத்த மாதம் கலைஞர் பேரன் மனு ரஞ்சித்துடன் நிச்சயத்தார்த்தம் ஆகவுள்ளது. இவர்கள் திருமணம் எப்படி நிச்சயக்கப்பட்டது தெரியுமா? இதை சமீபத்தில் மு.க.முத்துவின் துணைவியார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் இவருடைய பேத்தியும், விக்ரமின் மகளும் அமெரிக்காவில் ஒன்றாக படித்தவர்களாம், அவர்கள் சென்னை வந்த போது தன் பேத்தியை பார்க்க அக்‌ஷிதா அடிக்கடி வருவாராம்.

அப்போது தான் மனு ரஞ்சித்திடம் பழகியுள்ளார், இருவரும் நட்பாக தான் பழகினார்களாம், ஆனால், விக்ரம் குடும்பத்திற்கு மனு ரஞ்சித்தை பிடிக்க, பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண முடிவு செய்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

நயன்தாரா எடுக்கும் துணிச்சல் ஆச்சரியத்தில் படக்குழு..!!

2:19 AM |
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா தான். இவருடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.

இந்நிலையில் இவர் விக்ரமிற்கு ஜோடியாக இருமுகன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்துவருகின்றது.

 கடும் குளிர் என்று கூட பார்க்காமல் இவர் தனக்கான காட்சிகளை நடித்துக்கொடுத்து வருகிறாராம், மேலும், நயன்தாராவிற்கு என ஆக்‌ஷன் காட்சிகளும் இதில் இருக்க, அதிலும் துணிந்து நடித்து வருகின்றாராம்.

மேலும் வாசிக்க…

எனக்கும் விக்ரமிற்கும் சண்டையா? சூர்யா ஓபன் டாக்..!!

11:55 PM |
சூர்யா நடிப்பில் இந்த வாரம் 24 படம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு ஷோவில் கலந்துக்கொண்ட சூர்யாவிடம், ‘உங்களுக்கு நடிகர் விக்ரமிற்கும் ஏதும் சண்டையா’ என கேட்டனர்.

சூர்யா சிரித்துக்கொண்டே ‘யார் இப்படியெல்லாம் கூறுவது, நான் அவரின் ஐ படம் பார்த்து முடித்த பிறகு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினேன், தற்போது கூட அவர் இயக்கிய ஆல்பத்தில் நான் நடித்தேன், அப்படியெல்லாம் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

நட்சத்திர கிரிக்கெட் விழாவில் விக்ரமை கண்கலங்க வைத்த செயல்! வீடியோ

10:46 PM |
மேலும் வாசிக்க…

கிரிக்கெட் கிரவுண்டிலும் பழைய பகை! வெறுப்பு காட்டிய விக்ரம்..!!

2:44 AM |
புத்தன் ஏசு காந்தி மூன்று பேர் இமேஜையும் மிக்சியில் போட்டு நொறுங்க ஓட்டினால், மேலோட்டமாக ஒரு நுரை மிதக்குமே… அதுதான் விக்ரமின் இமேஜ். அந்த நுரையை மேலோட்டாமாகவே வழித்துப் போட்டுவிட்டு உள்ளே இறங்கினால், குடிச்ச வாயும் கருப்பு. கொண்ட வயிறும் கருப்பு என்பதாகதான் இருக்கும் அதன் ரிசல்ட்

நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சூர்யாவின் கெட்ட நேரம்… அங்குதான் கமல்ஹாசனும் விக்ரமும் இருந்தார்கள். சூர்யா மாதிரி பெரிய ஹீரோக்களுக்கு, சுமார் ஹீரோக்களை வைத்து ஷீல்டு கொடுக்க முடியாதல்லவா? அதனால் அருகிலிருந்த பெரிய ஹீரோவான கமலையும் சற்றே அவரைவிட சுமார் பெரிய ஹீரோவான விக்ரமையும் அழைத்துவிட்டார் அந்த அப்பாவி தொகுப்பாளினி.

ஐயோ பாவம் அவருக்கு எப்படி தெரியும் சூர்யாவும் விக்ரமும் கடந்த பல வருஷங்களாக உறக்கத்தில் கூட ஒருவர் பாக்கெட்டில் இன்னொருவர் கல்லை பொறுக்கி போடுகிற விஷயம்? இந்த பகை எதனால் வந்தது? யாரால் வந்தது? என்பதெல்லாம் இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று என்பதால் ஒரு பலத்த ஸ்கிப்!

விக்ரம் பெயரை சொன்னதும் சூர்யா முகத்தில் ஒரு இறுக்கம் ஓடி மறைவதற்குள், அந்த இடத்திலிருந்து சற்றே நகர்ந்து கொண்டார் விக்ரம். அறிஞ்ச தெரிஞ்ச பகைதான் என்பதால், சட்டென புரிந்து கொண்ட கமல், விக்ரம் கையை பிடித்து இழுத்து கவனச் சிதறலுக்கு ஆளாக்காமல் தானே சிங்கிளாக முன் வந்து ஷீல்டை கொடுத்தார். அப்பாடா… இருவர் முகத்திலும் நிம்மதி!

என்னைக்கோ குத்துன முள்ளு, இன்னைக்கு கத்தியா வந்து திரும்பிக் குத்துனா ஐயோ பாவம்… என்னதான் செய்யும் இதயம்ஸ்…?
மேலும் வாசிக்க…

அப்படி ஒருவரை பார்த்தால் உடனே காதலித்து விடுவேன்- காஜல் ஓபன் டாக்

2:28 AM |
விக்ரமின் கருடா படத்தின் படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் நாளை சர்தார் கப்பர் சிங் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் எளிதில் காதல் வசப்படுகின்ற பெண் தான், ஆனால், என் மனதிற்கு பிடித்தவரை நான் இன்னும் சந்திக்கவில்லை.

அப்படி யாரையும் பார்த்தால் உடனே காதலித்து விடுவேன், அவருடன் ஜாலியாக சுற்றுவேன். விமானத்தில் ஒன்றாக பயணிப்பேன். ஓட்டல், உல்லாசப்பயணங்கள் என்றெல்லாம் இருப்பேன்’ என அடுக்கிக்கொண்டே சென்றுள்ளார்.
மேலும் வாசிக்க…

யாரும் அறிந்திராத நடிகர் விக்ரமின் ரகசிய மறுபக்கம்..!!

1:47 AM |
மேலும் வாசிக்க…

உனக்கெதற்கு விருது? விக்ரம் பற்றி நடிகர் விவேக் உருக்கம்..!!

11:30 PM |
நேற்று அறிவிக்கபட்ட தேசிய விருதுகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியைதான் கொடுத்துள்ளது. ஐ படத்திற்காக நடிகர் விக்ரமின் இரண்டு வருட உழைப்பை பாராட்டி விருது அளிக்காமல் தமிழ் சினிமாவை உதாசீனபடுத்திவிட்டதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றானர்.

இதுபற்றி இப்போது காமெடி நடிகர் விவேக் கவிதையாக ஒரு டிவிட் எழுதியுள்ளார், அதில் " நீதான் எங்கள் விருது! உனக்கெதற்கு விருது?" என கேட்டுள்ளார்.
"நண்பா விக்ரம்,"ஐ" காக உடலை பெருக்கினாய்;

பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;

உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!"
மேலும் வாசிக்க…

கீர்த்தி சுரேஷ் அப்படி சொன்னாரா? இணையத்தை சுற்றும் பரபரப்பு செய்தி..!!

12:50 AM |
ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் விக்ரமுடன் நடிக்க மறுத்து விட்டார் என நாமே கூறியிருந்தோம்.

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் ‘விக்ரமிற்கு வயதாகிவிட்டது, அதனால், என்னால் அவருடன் நடிக்க முடியாது’ என கீர்த்தி கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

இதனால், கோபமான விக்ரம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை வழக்கம் போல் கலாய்க்க ஆரம்பிக்க, தற்போது இயக்குனர் திரு இதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார். இதில் ‘நாங்கள் இப்படத்திற்கு காஜல் அகர்வாலை கமிட் செய்ய தான் பேசி வருகிறோம்வேறு எந்த ஹீரோயினிடமும் பேசவில்லை’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

உருக்கத்துடன் பேசிய விக்ரம்..!!

5:48 AM |
மலையாளம் , தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற படங்களில் வில்லனாக கதாநாயனாக பல கதாபாத்திரங்களில்  நடித்து புகழ் பெற்ற நடிகர் கலாபவன் மணி அண்மையில் உயிரிழந்திருந்தார் . இதனால் சினி உலகமே ஆழ்ந்த துயரத்தில் இருந்ததை யாவரும் அறிவோம்

இந்நிலையில் இவரது மறைவு குறித்து பேசிய நடிகர் விக்ரம் ,இவரின் மரண செய்தி கேட்டு தான் மனமுடைந்ததுடன் சிறந்த கலைஞர் ஒருவரை இழந்த சினி உலகை காண்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சினிமா என்பது கனவு அது கலாபவன் மணிக்கு நன்றாக பொருந்தும் என்றும் குறிப்பிட்ட அவர் ஜெமினி மட்டுமல்லாது அவர் பல படங்களில் சிறப்பாக நடித்துள்ளார், காசி படத்துக்காக என்னை பாராட்டும் போது நான் மணியை தான் நினைத்துக்கொள்வேன் என்றார்.காசி படத்தின் மலையாள பதிப்பில் கலாபவன் மணி தான் ஹீரோவாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

விக்ரம் வயசு என்ன? என் வயசு என்ன? அவருடன் நடிக்க முடியாது… கீர்த்தி தடாலடி!

1:25 AM |
ஆனந்த் சங்கர் இயக்கும் ‘இரு முகன்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் விக்ரம் அடுத்து திரு இயக்கத்தில் ‘கருடா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

முதலில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை தான் கேட்டு அணுகினார்களாம் படக்குழுவினர். ஆனால் விக்ரம் வயசு பற்றி எல்லாம் விசாரித்த கீர்த்தி சுரேஷ் கருடா படத்தில் நடிப்பது பற்றி யோசித்து சொல்வதாக சொல்லி இருக்கிறார்.

பிறகு சில தினங்கள் கழித்து கருடா படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று தகவல் அனுப்பி இருக்கிறார். கருடா படத்தின் கதை பிடித்து, அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் ரெடியாக இருந்தும், அவர் ஏன் நடிக்க மறுத்தார் என்று விசாரித்தால் தான் தெரிகிறது உண்மை நிலவரம். விக்ரம் தன்னை விட பல மடங்கு வயதான ஹீரோ என்பதற்காகவே அவருடன் நடிக்க மறுத்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

அதோடு விக்ரமுடன் நடிக்கும்போது நான் அவருக்கு ஜோடியாக தெரிய மாட்டேன், அவருக்கு தங்கையாகவோ அல்லது மகளாகவோதான் தெரிவேன் என்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதற்கப்புறம்தான் காஜல் அகர்வால் உள்ளே வந்திருக்கிறார். அவர் விக்ரம் பற்றியோ… அவரது வயது பற்றியோ கவலைப்படுவில்லை என்றாலும் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிரவைத்திருக்கிறார். அதற்கு தயாரிப்பாளர் ஓகே சொல்ல, கருடா படத்தின் நாயகியாகிவிட்டார் அவர்.
மேலும் வாசிக்க…

‎விஜய்யால்‬ விக்ரம் & ஜீவாவுக்கு பாதிப்பு ! இருவரின் நட்புக்கு தீயை மூட்டிய விஜய்..!!

2:59 AM |
மேலும் வாசிக்க…

திருநங்கையாக நடிக்கும் விக்ரம்- அடுத்த கட்டம்..!!

12:06 AM |
விக்ரம் எப்போதும் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பார். ஐ படத்திற்காக அவர் எடுத்த முயற்சி, உழைப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தற்போது இவர் இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு இரட்டை வேடம்.

இதில் ஒன்று ரகசிய போலிஸ் அதிகாரி மற்றொன்று திருநங்கையாக நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. கண்டிப்பாக இப்படம் விக்ரமின் திரைப்பயணத்தில் அடுத்த கட்டமாகவிருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

மீண்டும் கவர்ச்சியில் நடிக்கும் நயன்..!!

11:07 PM |
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவர் ஏற்கனவே அஜித்தின் பில்லா படத்தில் ஒரு காட்சியில் பிகினியில் நடித்து அசத்தினார்.

படம் வெளியானதும் இந்த காட்சி பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர் விக்ரமின் இரு முகன் படத்துக்காக மீண்டும் பிகினியில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது படம் வெளிவரும் போது தான் தெரியவரும்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com