மலையாளம் , தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற படங்களில் வில்லனாக கதாநாயனாக பல கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் கலாபவன் மணி அண்மையில் உயிரிழந்திருந்தார் . இதனால் சினி உலகமே ஆழ்ந்த துயரத்தில் இருந்ததை யாவரும் அறிவோம்
இந்நிலையில் இவரது மறைவு குறித்து பேசிய நடிகர் விக்ரம் ,இவரின் மரண செய்தி கேட்டு தான் மனமுடைந்ததுடன் சிறந்த கலைஞர் ஒருவரை இழந்த சினி உலகை காண்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு சினிமா என்பது கனவு அது கலாபவன் மணிக்கு நன்றாக பொருந்தும் என்றும் குறிப்பிட்ட அவர் ஜெமினி மட்டுமல்லாது அவர் பல படங்களில் சிறப்பாக நடித்துள்ளார், காசி படத்துக்காக என்னை பாராட்டும் போது நான் மணியை தான் நினைத்துக்கொள்வேன் என்றார்.காசி படத்தின் மலையாள பதிப்பில் கலாபவன் மணி தான் ஹீரோவாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
கலாபவன் மணி
,
காசி
,
சினிமா
,
விக்ரம்
,
ஜெமினி