ஆனந்த் சங்கர் இயக்கும் ‘இரு முகன்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் விக்ரம் அடுத்து திரு இயக்கத்தில் ‘கருடா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
முதலில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை தான் கேட்டு அணுகினார்களாம் படக்குழுவினர். ஆனால் விக்ரம் வயசு பற்றி எல்லாம் விசாரித்த கீர்த்தி சுரேஷ் கருடா படத்தில் நடிப்பது பற்றி யோசித்து சொல்வதாக சொல்லி இருக்கிறார்.
பிறகு சில தினங்கள் கழித்து கருடா படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று தகவல் அனுப்பி இருக்கிறார். கருடா படத்தின் கதை பிடித்து, அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் ரெடியாக இருந்தும், அவர் ஏன் நடிக்க மறுத்தார் என்று விசாரித்தால் தான் தெரிகிறது உண்மை நிலவரம். விக்ரம் தன்னை விட பல மடங்கு வயதான ஹீரோ என்பதற்காகவே அவருடன் நடிக்க மறுத்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.
அதோடு விக்ரமுடன் நடிக்கும்போது நான் அவருக்கு ஜோடியாக தெரிய மாட்டேன், அவருக்கு தங்கையாகவோ அல்லது மகளாகவோதான் தெரிவேன் என்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதற்கப்புறம்தான் காஜல் அகர்வால் உள்ளே வந்திருக்கிறார். அவர் விக்ரம் பற்றியோ… அவரது வயது பற்றியோ கவலைப்படுவில்லை என்றாலும் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிரவைத்திருக்கிறார். அதற்கு தயாரிப்பாளர் ஓகே சொல்ல, கருடா படத்தின் நாயகியாகிவிட்டார் அவர்.
Tags:
Cinema
,
கீர்த்தி
,
சினிமா
,
விக்ரம்
,
விக்ரம் வயசு