புத்தன் ஏசு காந்தி மூன்று பேர் இமேஜையும் மிக்சியில் போட்டு நொறுங்க ஓட்டினால், மேலோட்டமாக ஒரு நுரை மிதக்குமே… அதுதான் விக்ரமின் இமேஜ். அந்த நுரையை மேலோட்டாமாகவே வழித்துப் போட்டுவிட்டு உள்ளே இறங்கினால், குடிச்ச வாயும் கருப்பு. கொண்ட வயிறும் கருப்பு என்பதாகதான் இருக்கும் அதன் ரிசல்ட்
நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சூர்யாவின் கெட்ட நேரம்… அங்குதான் கமல்ஹாசனும் விக்ரமும் இருந்தார்கள். சூர்யா மாதிரி பெரிய ஹீரோக்களுக்கு, சுமார் ஹீரோக்களை வைத்து ஷீல்டு கொடுக்க முடியாதல்லவா? அதனால் அருகிலிருந்த பெரிய ஹீரோவான கமலையும் சற்றே அவரைவிட சுமார் பெரிய ஹீரோவான விக்ரமையும் அழைத்துவிட்டார் அந்த அப்பாவி தொகுப்பாளினி.
ஐயோ பாவம் அவருக்கு எப்படி தெரியும் சூர்யாவும் விக்ரமும் கடந்த பல வருஷங்களாக உறக்கத்தில் கூட ஒருவர் பாக்கெட்டில் இன்னொருவர் கல்லை பொறுக்கி போடுகிற விஷயம்? இந்த பகை எதனால் வந்தது? யாரால் வந்தது? என்பதெல்லாம் இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று என்பதால் ஒரு பலத்த ஸ்கிப்!
விக்ரம் பெயரை சொன்னதும் சூர்யா முகத்தில் ஒரு இறுக்கம் ஓடி மறைவதற்குள், அந்த இடத்திலிருந்து சற்றே நகர்ந்து கொண்டார் விக்ரம். அறிஞ்ச தெரிஞ்ச பகைதான் என்பதால், சட்டென புரிந்து கொண்ட கமல், விக்ரம் கையை பிடித்து இழுத்து கவனச் சிதறலுக்கு ஆளாக்காமல் தானே சிங்கிளாக முன் வந்து ஷீல்டை கொடுத்தார். அப்பாடா… இருவர் முகத்திலும் நிம்மதி!
என்னைக்கோ குத்துன முள்ளு, இன்னைக்கு கத்தியா வந்து திரும்பிக் குத்துனா ஐயோ பாவம்… என்னதான் செய்யும் இதயம்ஸ்…?
Tags:
Cinema
,
Kamal Hassan
,
Vikram
,
கமல்ஹாசன்
,
சினிமா
,
சூர்யா
,
விக்ரம்