காலத்தை கடந்து செல்லும் ஐன்ஸ்டினின் Time Machine கதைக்களத்தை கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துள்ளது. அந்தவரிசையில் தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.
கதைக்களம்
1990 இல் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும்,
அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா.
பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா? மகன் சூர்யா பெரியப்பாவை பழி வாங்கினாரா? என்பதை பல சுவராஷ்யங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.
இரண்டு கதாபாத்திரத்தில் நிறைய நடித்திருந்தாலும் சூர்யா மூன்று கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதன்முறை குறிப்பாக வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில்
ஆங்காங்கே சற்று பயத்தை ஏற்படுத்துகிறார். இளமை காலத்தில் வரும் போதும் சரி வயதான காலத்தில் வீல் சேரில் வரும் போதும் தனது கதாபாத்திருத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார்.
சமந்தாவிற்கும், நித்யா மேனனுக்கும் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரத்திரம் இல்லையென்றாலும் தங்களுடைய பங்கை சரியாக செய்துள்ளனர்.
குறிப்பாக சமந்தா அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.
வேல் படத்திற்கு பிறகு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.
ஒரு கலகலப்பான அம்மாவாகவும் சரி, சூர்யா தன்னுடைய மகன் இல்லை என்பதை சொல்லும் போதும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.
சத்யன், அப்புகுட்டி, சார்லி இவர்கள் படத்தில் அவ்வப்போது வந்து சென்றாலும் தங்களுடைய பங்குக்கு கலகலப்பூட்டுகின்றனர். குறிப்பாக அஜய்(மித்ரன்) ஆத்ரேயாவுடன் வரும் போது அவரும் சேர்ந்து மிரட்டுகிறார்.
யாவரும் நலம், மனம் படத்திற்கு பிறகு இயக்குனர் விக்ரம்குமாருக்கு இதுதான் அடுத்த படம் என்பதால் பல நாட்கள் கதையை யோசித்து எடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹுமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு இன்னும் ஒரு பலத்தை சேர்த்திருக்கிறது. காலம் என் காதலி, நான் உன் அருகினிலே பாடல்கள் மனதில் தங்கி
விடுகின்றன. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் காட்சிகளை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.
க்ளாப்ஸ்
சூர்யாவின் ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் நிறைய ரசிகர்ளை சூர்யாவிற்கு கொடுக்கும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆய்வு கூடம் 1990களுக்கு ஏற்றார் போல் தத்ரூபமாக இருக்கிறது.
பல்ப்ஸ்
படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது. அதை சற்று குறைத்திருக்கலாம். படத்தின் இரண்டாம் பாதியில் கதை நன்றாக செல்லும் நேரத்தில் வரும் காதல் காட்சிகள் படத்தின் ஓட்டத்தை குறைக்கிறது.
மொத்தத்தில் 24 இந்த கோடை காலத்திற்கு ஏற்ற படம்.. விக்ரம் குமார்-சூர்யாவின் புது விதமான முயற்சிக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்
ரேட்டிங்: 3.25/5
Tags:
Review
,
சமந்தா
,
சரண்யா
,
சூர்யா
,
திரை விமர்சனம்
,
நித்யா மேனன்