‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ படங்களில் விஜய் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்தார் அமலா பால். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இளம் நடிகர்களுடன் நடித்து வந்த அமலாபால் அப்போதுதான் நடிகர் விஜய், விக்ரம் போன்றவர்களுடன் நடிக்கத் தொடங்கினார்.
முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்கும் முன்னரே இயக்குனர் விஜய், அமலா பால் காதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. சுமார் 1 வருடம் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இல்லறத்தில் கவனம் செலுத்தினார். பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
சூர்யாவுடன் ‘பசங்க 2’ படத்தில் நடித்தவர் தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தில் நடித்தார். அமலாபால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதையடுத்து விஜய்யுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திருமணத்துக்கு பிறகு அடிக்கடி இருவரும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிந்ததுடன் அப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக பொது இடங்களில் ஜோடியாக வருவதை தவிர்த்து வருகின்றனர்.
தவிர அமலாபால், சுமார் 2 வருடம் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கும் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இது விஜய்யுடன் அவருக்கு ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாட்டை காட்டுவதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாமல் விஜய், அமலாபால் இருவரும் மவுனம் காத்து வருகின்றனர்.
Tags:
Cinema
,
அமலா பால்
,
கருத்து வேறுபாடு
,
சினிமா
,
சூர்யா
,
தலைவா
,
தனுஷ்
,
விஜய்