நடிகர் சூர்யா தொடர்பாக மலேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தனக்கே தெரியாது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா இடம்பெறவுள்ளதாகவும், இதில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவுள்ளதாகவும், அவர் இதற்கு பணம் கோரியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நடிகர் சூர்யா தனது டிவிட்டர் தளத்தில், "இப்படிபட்ட தகவல் கூட எனக்கு தெரியாது. இதில் கலந்துகொள்ளும்படி என்னை யாரும் அணுகவும் இல்லை. கலைத்துறையில் இருக்கும் நான் மதம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிச்சயம் சம்மதித்து இருக்க மாட்டேன்.
சமூக வளர்ச்சி, மாற்றம், விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்து கொள்ளும் நான் அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கி கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற கொள்கையில் வாழ்கின்ற நான் பணம் பெற்றதாக வந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை.
மலேசியாவில் இடம்பெறும் நிகழ்ச்சிக்கும் எனக்கும் எந்தவித சம்மதமும் இல்லை. இது தொடர்பாக மேலும் என் பெயரை பயன்படுத்தினால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.
இது போன்ற செய்திகள் வருவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கறது.என் மீது அன்பு கொண்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
இனி இது போன்ற தவறான நோக்கத்தோடு வரும் செய்திகளை புறக்கணிக்க வேண்டும் என நடிகர் சூர்யா மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
சமூக வளர்ச்சி
,
சினிமா
,
சூர்யா
,
டிவிட்டர்
,
மலேசியா
,
மாற்றம்
,
விழிப்புணர்வு